மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசலிங்கம் பொன்னம்பலம்
வயது 672 ஏப்ரல், 1952 – 12 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Ravensburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணேசலிங்கம் பொன்னம்பலம் அவர்கள் 12-10-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புத்திரரும், சுப்பிரமணியம் காலஞ்சென்ற ராஜலக்ஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாகரன்(ஜேர்மனி), சுதர்ஷன்(ஜேர்மனி), சுமன்(ஜேர்மனி), சத்தியன்(இந்தியா), ஜேசுதாசன்(ஜேர்மனி), சஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாஷினி(ஜேர்மனி), சுதாஷினி(ஜேர்மனி), நோரா(ஜேர்மனி), சுகன்யா(இந்தியா), கீதகரணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மாவதி(கனடா), காலஞ்சென்ற சகுந்தலாதேவி பாலசுப்பிரமணியம்(இலங்கை), சத்தியசீலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நெல்லைநாதன்(கனடா), காலஞ்சென்ற தேவேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற குமார்(இலங்கை), ஜோகன்(இலங்கை), இந்திராகாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரனேஷ்- ஜெரேஷியா, நந்தினி- ப்ரசீலா, அஜீவன், அருஜன், ஆரோன்– றொம்மேலோ, நித்தியன், ப்ரீத்தி, வேந்தன், அஞ்சலி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தில் 02/APR/1952 ஆம் ஆண்டில் திரு.திருமதி பொன்னம்பலம் நல்லம்மாதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.கணேசலிங்கம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் பத்மாவதி, சகுந்தலாதேவி பாலசுப்பிரமணியம், சத்தியசீலன் எனும் உடன்பிறப்புடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி சுப்பிரமணியம் ராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளான கனகேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக சுதாகரன், சுதர்ஷன், சுமன், சத்தியன், ஜேசுதாசன், சஞ்சன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கமலாஷினி, சுதாஷினி, நோரா, சுகன்யா, கீதகரணி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து, பிரனேஷ்-ஜெரேஷியா, தந்தினி-ப்ரசீலா, அஜீவன், அருஜன், ஆரோன்-றொம்மேலோ, நித்தியன், ப்ரீத்தி, வேந்தன், அஞ்சலி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் இவர் கடின உழைப்பாளியாக விளங்கியதுடன், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 12.10.2019 இல் 67 வயதில் ஜேர்மனியில் உள்ள Ravensburg நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

