மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கணேசஜயர் பரராஜசேகரஜயர்
வயது 6728 பிப்ரவரி, 1953 – 15 ஜனவரி, 2021
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- மீசாலை, நுணாவில், கொழும்பு, மலேசியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, நுணாவில், கொழும்பு, மலேசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசஜயர் பரராஜசேகரஜயர் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மீசாலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசஜயர், அம்பிகைஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வநாதசர்மா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாம்பாள்(மலேசியா) அவர்களின் பாசமிகு கணவரும்,
யாழினி(கொழும்பு), செந்தூரசர்மா(மலேசியா), துஷிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருபாகரசர்மா, சிவசங்கரி, தயாரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்துஜன், சிந்துஜன், சானுஜன், நிகாரிகா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஜெயசுதன், ஜானனி, ரக்ஷிதா, ரக்ஷனா, த்ரிஷிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-01-2021 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று கண்ணாடிப்பெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேற்றுவரை எம்முடன் வாழ்ந்த நீங்கள்
இன்று நெடுந்தூரம் போனதெங்கே
கண்ணில் நீரை ஈந்தே இன்று
கனவாய் ஆனாய் அஞ்சலித்தோம்
பாதி வழியினில் நாம் பரிதவித்திட
பறந்து போனதேனோ ?...
நிஜமான உங்கள் வாழ்வு இன்று
நிழலாகிப் போனதேனோ?
மீண்டு நீர் வாராயோ
நாம் மகிழ்ந்திட .....
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

