ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெராட் மஜெல்லா சூசைப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெராட் மஜெல்லா சூசைப்பிள்ளை

ஓய்வுபெற்ற ஆசிரியர்

வயது 9015 செப்டம்பர், 1928 – 10 ஜூலை, 2019

பிறந்த இடம்
புலோலி
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், நியூ யோர்க்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Newyork ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெராட் மஜெல்லா சூசைப்பிள்ளை அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை கத்தரினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வின்சன்(உபதேசியார்- யாழ். பெரிய கோவில்) திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி றோசலின்(ஜெயமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,

யோசப்பின் நொயலின்(றீனி), திரேசா நீலியா(ஜனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அல்பிறட் யோசப் இம்மானுவேல், பென் கொன்சன்ரைன் விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மற்றும் லூர்தம்மா, பிரான்சிஸ் போல் ஆகியோரின் இணைபிரியாச் சகோதரரும்,

காலஞ்சென்ற விக்டோரியா அந்தோனிப்பிள்ளை, கிறகெறி ஞானப்பிரகாசம் மற்றும் செல்வறாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டெனிசன், டிவினியா, கெனோசன், ஆரோன், டயன்றா, ஜெரோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த புலோலியில் 15/SEP/1928 இல் திரு திருமதி சூசைப்பிள்ளை கத்தரினம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு.ஜெராட் மஜெல்லா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அந்தோனிப்பிள்ளை, லூர்தம்மா மற்றும் பிரான்சிஸ் போல் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், யாழ்.பெரிய கோவில் உபதேசியார் வின்சன் திரேசம்மா தம்பதிகளின் மகள் மேரிறோசலின்(ஜெயமணி) எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து யோசப்பின் நொயலின், திரேசா நீலியா போன்ற அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அல்பிறட் யோசப் இம்மானுவேல், பென் கொன்சன்ரைன் விஜயரட்ணம் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து டெனிசன், டிவினியா, கெனோசன், ஆரோன், டயன்றா, ஜெரோன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் ஆசிரியராக கடமை ஆற்றி ஓய்வு அடைந்த இவர் அனைவருடனும் நகைச்சுவையாக பேசுவதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10.07.2019 இல் 90 வயதில் அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

கல்வி புகட்டிய உயர்
குருவே
பல்கிப் பெருகிய பாச
உறவே
அன்பாய் பழகிய அறிவுக்
கடலே
அன்னை போல் மனதில்
உயர்ந்து
கண்ணீர் தந்தீர் பிரிவில்
ஆழ்த்தி

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.