ஆறுதல்

மரண அறிவித்தல்

ஞானம்மா வரராஜசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஞானம்மா வரராஜசிங்கம்

இளைப்பாறிய ஆசிரியை

வயது 805 ஏப்ரல், 1937 – 31 அக்டோபர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு பெருங்காடு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம்மா வரராஜசிங்கம் அவர்கள் 31-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வரராஜசிங்கம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

திலீபன்(கனடா), கவிதா(கீதா- கனடா), கலையரசி(சுதா- கனடா), எழிலரசி(உஷா- ஐக்கியஅமெரிக்கா), சாரு(ராஜி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, ஏரம்பு(இளைப்பாறிய அதிபர்), மற்றும் இராசம்மா(நோர்வே), காலஞ்சென்ற சந்திரசேகரம்(இளைப்பாறிய எழுதுவினைஞர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுகந்தினி, செந்தில்முருகன், பாலன், தயாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எழிலி, பொழிலன், இனியன், மதுஷன், மதுஷா, ஆரணி, எழிலன், கிஷோக், ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னம்மா(இளைப்பாறிய ஆசிரியை), சுந்தரமுர்த்தி, மற்றும் ஞானம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, மனோன்மணி, மற்றும் தனபாலசுந்தரம் (இளைப்பாறிய ஆசியர்- கனடா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை(இளைப்பாறிய ஆசிரியை), கைலாயநாதன், மற்றும் திருஞானம்(கிராமசபை அலுவலகர்- வன்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.