நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின்
வயது 8019 மே, 1939 – 14 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- சுருவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் மேரியோசெப்பின் அவர்களின் இரங்கற் திருப்பலியும், நன்றி நவிலலும்.
அன்பை ஊட்டி அறிவுக்கு வழிகாட்டி துன்பத்திலும், இன்பத்திலும்,
எம்மைக் காத்து வழிநடத்தி எமக்குரிய சகல நன்மைகளுக்கும்
ஈடு இணையாக இருந்து உறவினில் கலந்த என் அன்னையே
உங்கள் உறவிற்காக ஏங்குகின்றோம் அம்மா!
எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அம்மா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே அம்மா!
31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அம்மா!
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அம்மா!
தரணியில் உம்மை எப்போ காண்போம் அம்மா!
உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணத்தின் சுருவிலில் 19/MAY/1939 இல் திரு.திருமதி அந்தோனிப்பிள்ளை விக்ரோரியா தம்பதிகளின் அன்பு மகள் மேரியோசெப்பின் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் அலெக்சாண்டர், யோசேப், சுவக்கின், மேரிஜசிந்தா, அலோசியஸ், லூசியாபத்மினி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சவரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் மகனான திரு.ஞானப்பிரகாசம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக அன்ரனி பீற்றர், ஜோண்கில்லறி, ஒசிறோச், செல்வதி, ஜெயாவதி, கெனடி, ஜெயக்குமார், மெரினா தயாவதி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
பிள்ளைகள் பெரியவர்களாக ஆனதும் லூர்துமேரி, சசிலா, தனவதி, ஜோர்ஜ் சைமன், நரேன், ஜெயந்திமாலா, அனிஸ்ரெலா, அருள்தாஸ் என்பவரை திருமணம் முடித்து வைத்ததுடன் தனது வம்ச வளர்ச்சிகளான பமிலா, டவுரின், அக்கினி, நிரோஸ், வினு, திலக்ஷன், ஜெனக்ஷன், அஜந்தன், கஜீவன், விதுஷா, விந்துஷா, கினுஷா, யதுஷன், கெளரீசன், தனுஜன், லக்ஷனா, ரஞ்சனி, வழுதி, கணியன், றக்ஷனா, திபாஷனா, கனோஜன், சாளினி, திலானி, சறோஷினி, அபிஷன், அஜய்ஷன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14.11.2019 இல் 80 வயதில் சுருவிலில் இயற்கை மரணம் அடைந்தார்.
அன்னையே எங்கள் ஆருயிர் தெய்வமே
நன்மைகள் பல புரிந்த உள்ளமே
பண்பை வளர்த்து பாலூட்டிய உயிரே
நின்னைக் கூற நிறைய உள்ளதே
ஆயிரம் உறவில் உமைப் போல்
உயரிய உறவு கண்டிலோம்.
பிரிந்தீரே எமை விட்டு
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

