மரண அறிவித்தல்

கோபால் சோமசுந்தரம் குகதாஸ்
வயது 85, Retired Cheif Accountant, Ministry of Defence, Srilanka
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கோபால் சோமசுந்தரம் குகதாஸ் அவர்கள் 22-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை குகதாஸ், செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சபாபதி கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளரட்ணம்(Retired Principal- Dehiwala Tamil Maha Vidyalayam) அவர்களின் அன்புக் கணவரும்,
அனோமா, அஜித்குமார், அனீலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திவ்வியநாதன், பிறேமலதா, நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விசாலாட்ஷி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆர்த்தி, கிருத்திகா, துளசி, அருணன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
அர்ச்சனா, பிரஷானா, லக்ஷனா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வாழ்க்கை வரலாறு
இலங்கையில் அழகிய இடமும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், தமிழ்பேசும் மக்களைக் கொண்டதும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தில் 24/NOV/1933 ஆம் ஆண்டில் சங்கரப்பிள்ளை குகதாஸ் செல்லம்மா தம்பதிகளுக்கு கனிஷ்ட புதல்வனாக கோபால் சோமசுந்தரம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் விசாலாட்ஷி, ஸ்ரீகாந்தன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சபாபதி கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகள் பவளரட்ணம் என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து அனோமா, அஜித்குமார், அனீலா போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்ததுடன் திவ்வியநாதன், பிறேமலதா, நிமலன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் ஆர்த்தி, கிருத்திகா, துளசி, அருணன், அர்ச்சனா, பிரஷானா, லக்ஷனா போன்ற பேரப்பிள்ளையுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கையில் Ministry of Defence இல் Cheif accountant ஆக சேவை செய்து ஓய்வு பெற்றதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார், நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன், பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 22.05.2019 இல் 85 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அறிவில் சிறந்த
......நல்லுள்ளமே
நெறி தவறாது வாழ்ந்து
.......உயர்ந்த செம்மலே
வறியவற்கு உதவும்
........ஆண்டவன் மனமே
பறி போனதே உயிர்
......அழுகிறோம் தினமும்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

