நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கோபாலகிருஷ்ணன் நாகேஸ்வரி
வயது 7913 நவம்பர், 1941 – 18 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணன் நாகேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.
எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!
உண்ணாமல் உறங்காமல் உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்னே கொடுமையிது
இறைவனுக்கும் இதயமில்லை
உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
அன்னார், யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணன் நாகேஸ்வரி அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். இவர் அனைத்து பேரப்பிள்ளைகளும், பூட்டப்பிள்ளைகளும், அருமை மிகு பேத்தியும் மற்றும் உற்றோர் உறவினர் நண்பர்களுடன் கூடிப் பழகிய ஒரு சிறந்த பெண்மணியுமாவார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

