ஆறுதல்

மரண அறிவித்தல்

குணபூசனி அம்மா கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

குணபூசனி அம்மா கந்தசாமி

வயது 7510 மார்ச், 1943 – 21 ஜனவரி, 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
தாவடி, கனடா, நோர்வே

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், தாவடி, கனடா, நோர்வே ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணபூசனி அம்மா கந்தசாமி அவர்கள் 21-01-2019 திங்கட்கிழமை அன்று நோர்வே Oslo வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சுப்பம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சுப்பையா கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சந்திராதேவி(கனடா), தெய்வேந்திரம்(தெய்வர்- நோர்வே), புஸ்பலக்சுமி(ஜீவா- நோர்வே), இராஜேந்திரம்(ராஜ்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினராசா, தர்மராசா, இராஜலக்சுமி, தங்கராணி ஆகியோரின் சகோதரியும்,

உருத்திரகுமார்(கனடா), மனோராஜ்(நோர்வே), சியாமளா(நோர்வே), லோஜீ(கனடா) ஆகியோரின் மாமியாரும்,

சாலினி, தாட்சா, அபிராமி(கனடா), தேசிஹா, கம்சிஹா, பிரதீப், அருண்(நோர்வே), றிசான், றிசானி, லக்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லேனா(கனடா) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

தம்பிராசா, சுப்பம்மா என்பவர்களுக்கு வேம்படி வீதி மானிப்பாயில் மூத்தமகளாக பிறந்து, இரத்தினராசா, தர்மராசா, இராஜலக்சுமி, தங்கராணி ஆகியோரை சகோதரமாகக்கொண்டு வாழ்ந்து வந்தார். இவரின் சிறுவயதிலே முதலில் தாயை இழந்து பின்பு தந்தையும் இழந்தார். தனது 19 ஆவது வயதிலே தாவடியில் சுப்பையா கந்தசாமியை மணம்முடித்து புகுந்த இடத்திலே இல்லற வாழ்வை நல்லறமாக மாற்றி வாழ்ந்து வந்தார். சிறுவயதிலே தனது பள்ளிக்காலங்களை முடித்தாலும் தமிழ், ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளை தெரிந்து வைத்திருந்ததுடன் முதல் இரண்டு மொழிகளில் அயலில் உள்ள சிறார்களுக்கு அதை கற்பித்து ரீச்சர் என்று அழைக்கப்பட்டார். இவர் தன்னுடைய பிள்ளைச்செல்வங்களாக ஐவரை பெற்றெடுத்து அதில் ஒன்றை சிறுவயதிலேயே இழந்து, சந்திரா, தெய்வர், ஜீவா, ரமேஷ் ஆகியோரை “கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக” என்ற வள்ளுவனின் பொய்யா மொழிக்கு இணங்க பல வழிகளிலும் வழிக்காட்டியாக திகழ்ந்தார். இதற்கமைய அவரின் பிள்ளைகளும் அவருக்கு “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்டதாய்” என்ற நிலைக்கு இட்டுச்சென்றார்கள்.

குணபூசனியம்மா தமிழீழப்போரின் காரணத்தால் தாவடியை விட்டு வெளியேறி கொழும்பு சென்று அங்கும் பத்துக்கும் மேற்பட்டவருடங்கள் வாழ்ந்தார். 1993 இல் அன்புக்கணவரை இழந்து குடும்பப்பொறுப்பை முழுமையாக ஏற்று பிள்ளைகளுக்கு நல்ல குடும்பத்துணைகளையும் சேர்த்து வைத்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

தமிழ் மரபின்படி மனையாளனுக்குப்பின் மக்களேயென அவர்கள் நகர்ந்த பாதையில் அவரும் தொடர்ந்து நோர்வே, கனடாவென கடைசி 15 வருடங்களைக் கழித்தார். இறுதியில் காலனின் திருவிளையாடலில் உடல்நோய்வாய்ப்பட்டு இம்மண்ணையும் சொந்தபந்தங்களையும் விட்டு பூவுலகம் சென்றுவிட்டார்.

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.