ஆறுதல்

மரண அறிவித்தல்

இளையதம்பி சிவசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இளையதம்பி சிவசுப்பிரமணியம்

ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் கல்வித் திணைக்களம்- யாழ்ப்பாணம்

வயது 8420 நவம்பர், 1934 – 1 ஜூன், 2019

பிறந்த இடம்
சண்டிலிப்பாய்
வாழ்ந்த இடம்
சண்டிலிப்பாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-06-2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், தர்மஷரதர் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவராஜ்(சுவிஸ்), சிவபாலா(திட்டமிடல் பணிப்பாளர், உள்ளுராட்சி அமைச்சு வ.மா), சிவதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசுப்பிரமணியம், நாகேந்திரம், சண்முகராஜா, குஞ்சரலிங்கம், தேவராணி, புஸ்பராணி, இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வநாதன், கமலேஸ்வரி, வனிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவராமன், சிவப்பிரியா, சிவாஞ்சலி, சிவநீபன், சிவநீபா, அர்ஜீன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்ரம்பனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த சண்டிலிப்பாய் ஆலங்குளாய் வீதி இளையதம்பி அன்னலட்சுமி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக சிவசுப்பிரமணியம் அவர்கள் 20/NOV/1934 இல் அழகு நிறைந்த இவ் இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பாலசுப்பிரமணியம், நாகேந்திரம், சண்முகராஜா, குஞ்சரலிங்கம், தேவராணி, புஸ்பராணி, இந்திராணி ஆகிய உடன் பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் தர்மஷரதர் தவமணி தம்பதிகளின் அன்பு மகள் பகவதி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சிவராஜ், சிவபாலா, சிவதர்சினி போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், பெரியவர்கள் ஆனதும் செல்வநாதன், கமலேஸ்வரி, வனிதா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சிவராமன், சிவப்பிரியா, சிவாஞ்சலி, சிவநீபன், சிவநீபா, அர்ஜின், அபிராமி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் யாழ்/ கல்வித் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன், எப்போதும் புன்னகை முகத்துடனும், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 01.06.2019 இல் 84 வயதில் சண்டிலிப்பாயில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

சண்டிலிப்பாய் தந்த
......சந்தன மனமே
சந்ததி பெருக்கி
.......சந்தோசமாக வாழ்ந்து
புன்னகை முகமும்
.......புது வசந்தமுமாக
புகழ் பரப்பி
........போனீரே பிரிந்து

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.