25ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி சின்னத்தம்பி
வயது 739 மே, 1919 – 11 டிசம்பர், 1992
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சின்னத்தம்பி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் - வள்ளுவர்-
கால் நூற்றாண்டுகள் கழிந்தது ஐயா!
நினைவில் இருந்து மறையவில்லை உங்கள் அன்பு முகம்
25 வருடங்கள் என்ன, 50 வருடங்கள் ஆனாலும்
நீங்கள் எம்மீது காட்டிய அன்பை, எம்மை வளர்த்த வளர்ப்பை
மறந்து விட முடியுமா ஐயா?
எங்கள் அம்மாவுக்கு இனியதொரு
வாழ்க்கைத் துணையாக இருந்து
உலக மக்களுக்கு நீங்கள் இருவரும்
'உதாரணத் தம்பதிகளாய்' வாழ்ந்து காட்டினீர்கள்
பிள்ளைகளாகிய எம் எல்லோருக்கும்
உடல், பொருள், ஆவியை ஒப்படைத்த தந்தையாக,
நமக்கு 'நல்லன' எல்லாம் கற்றுத் தரும் முதல் ஆசானாக,
பேரப்பிள்ளைகளை உளமார நேசித்த பேரனாக,
உற்றாரும், மற்றாரும், அயலவரும்
உங்களிடம் பணி புரிந்த தொழிலாளரும் நேசித்த
உயர்ந்த மனிதனாக வாழ்ந்தீர்கள் ஜயா!.
நாம் வளமாய் வாழ வழி சமைத்து,
நம் குடும்பத்தை சிறப்புற வாழ வைத்து
எமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாய்,
வாழ்வின் ஒளியாய் நின்ற எங்கள் தந்தையே!
தாயாரைப் போலவே எம்மைத் தோளிலும், மார்பிலும்
தூக்கி வளர்த்தீர் ஐயா!
அறிவூட்டும் அற்புதக் கதைகள் பல சொல்லி
அம்மாவைப் போலவே எமக்கு அன்போடு
அமுதூட்டும் பணியினையும் செய்தீர்கள்
எங்கள் சிந்தையிலே தர்மத்தை, நியாயத்தை,
அன்பை விதைத்தீர்கள் விலை மதிப்பில்லா
உங்கள் அன்பால், உழைப்பால், தியாகத்தால்
அன்றோ பிள்ளைகள் நாம் சிறப்புற வளர்ந்தோம்
உங்கள் பிள்ளைகள், பேரக் குழந்தைகள்,
பூட்டப் பிள்ளைகள் பெருமைகள் பல பெற்று
சிறப்புற வாழ்வதைப் பார்க்கும் பாக்கியத்தை
நீங்கள் அடையாதது ஏன் என்பதே நாங்கள்
இன்றளவும் இறைவனிடம் எழுப்பும் கேள்வி
உங்களின் சிறப்பை, சிறப்பான வளர்ப்பை
உங்கள் பிள்ளைகளாகிய எமது சிறந்த வாழ்வில்
ஒவ்வொரு தருணத்திலும் உணர்கிறோம்.
உங்கள் உருவத்தை பிள்ளைகளாகிய எம்மிலும்,
உங்கள் பேரக் குழந்தைகளாகிய எம் பிள்ளைகளிலும்
தினமும் கண்டு வணங்குகிறோம்.
நீங்கள் வகுத்துத் தந்த பாதையில்,
நீங்கள் புகட்டிய அறிவு என்னும் தீபம் ஏந்தி
அறத்துக்கு உட்பட்ட வாழ்க்கை வாழ்வோம் என்று
உங்கள் 25 ஆவது ஆண்டு நினைவு நாளில்
சபதம் செய்கிறோம் தந்தையே!
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி
"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் - வேண்டா
நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கென்னென் றிட்டுண் டிரும்" - ஒளவையார்-
— உங்கள் நினைவால் வாடும் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

