மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இளையதம்பி குலசிங்கம்
வயது 892 ஆகஸ்ட், 1929 – 7 மே, 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி குலசிங்கம் அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னையா பாலாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகுலேஸ்வரி, ஈஸ்வரி, ஞானகுலேஸ்வரி, கெளரி, இராஜேந்திரம், கலா, ரோசி, குமுதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தங்கபூரணம், பாக்கியம், ராணி- திருநாவுக்கரசு, மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ஸ்ரீகந்தவேல் மற்றும் தம்பிராசா, ராமகிருஷ்ணன், சந்திரசேகர், செல்வரட்ணம், துரைசிங்கம், செல்வகுமார், மாலினிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாலசுரேஷ், ரமணா, சின்னா, யாழினி, நிஷானி, மைத்திரேஜி, ஜனார்த்தனன், திவாகர், அகல்யா, நதியா, திவானிஷா, வர்ஷினி, பிரகாஷ், பிரதிகா, ஜனகன், கார்த்தி, லவண், வத்சலா, சுஜிவன், துஷந்தன், கெளசல்யா, ஜெஷா, தாரணி, மீரா, மாட்டின், கார்த்தி, அலன், நிர்மலன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மெளனிஷா, சக்திவேலா, காஷினி, கயரன், மிரபெலா, மல்லியா, ரேய்ணா, சஞ்ஜெனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வாழைத்தோட்டம், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த உடுப்பிட்டியில் 02/AUG/1929 இல் இளையதம்பி சின்னம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக குலசிங்கம் அவர்கள் தங்கபூரணம், பாக்கியம், ராணி, திருநாவுக்கரசு, மணி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன். பொன்னையா பாலாமணி தம்பதிகளின் அன்பு மகள் பரமேஸ்வரி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பாலகுலேஸ்வரி, ஈஸ்வரி, ஞானகுலேஸ்வரி, கௌரி, இராஜேந்திரம், கலா, ரோசி, குமுதினி ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கார்கார குலசிங்கம் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 07.05.2019 இல் 89 வயதில் பிரித்தானியாவில் உள்ள இலண்டனில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
உடுப்பிட்டி மண்ணின்
......உத்தம உள்ளமே
கவலை மறந்து
.......காத்து மகிழ்ந்த
அன்பு உறவே
.....அழகிய உருவே
கவலை தந்து
.......பிரிந்து சென்றீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

