மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இந்திரகுமார் சிவறஜனி
வயது 504 ஆகஸ்ட், 1968 – 10 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- குரும்பசிட்டி
- வாழ்ந்த இடம்
- Villefranche-Sur-Saone
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villefranche-sur-Saone ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இந்திரகுமார் சிவறஜனி அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற துரைராஜா, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இந்திரகுமார்(இந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,
முகுந்தன், மாதங்கி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமாரன், காலஞ்சென்ற பரமேஸ்வரன்(குட்டி), பாலகுமாரன், காலஞ்சென்ற ஞானகுமாரன், கணேசகுமாரன், காலஞ்சென்ற கிருஸ்ணகுமாரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயலஷ்சுமி, ஜெயராணி, சிறிஸ்கந்தா, சிவகுமார், ரவிக்குமார், ஈஸ்வரி ரத்தினாம்பிகை(சாராதா), கலாவதி, பவளராணி, சாந்திதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவலிங்கம், ரவீந்திரன்(ரவி செல்லத்துரை), ஸ்பரூபராணி, குலமங்கை, சுபாசினி ஆகியோரின் அன்பு உறவினரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய வடமராட்சியில் வீரர்கள் வாழ்ந்த பூமியும் எழுச்சிமிகு சமுதாய இளைஞர்களைக் கொண்டதும், புகையிலைத் தோட்டம், தெங்கு தோட்டம், பயன் தரும் மரங்களைக் கொண்டதுமான குரும்பசிட்டியில் 04-08-1968 இல் சுப்பிரமணியம், இராசம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக சிவறஜனி அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் சிவகுமாரன்,பரமேஸ்வரன், பாலகுமாரன், ஞானகுமாரன், கணேசகுமாரன், கிருஸ்ணகுமாரன் போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் அளவெட்டியைச் சேர்ந்த துரைராஜா, நாகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகனான இந்திரகுமார் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து முகுந்தன், மாதங்கி போன்ற அருமைப் பிள்ளைகளை பெற்று வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் பெறுமைசாலியாக வாழ்ந்து குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவி செய்வதை தனது வாழ்வில் அங்கமாக கொண்டவர். இவ்வாறு கணவர், பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10-04-2019 இல் 50 வயதில் பிரான்ஸில் உள்ள villefranche-sur-saone நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு அம்மா
ஆசை உறவே
இன்னல் தாங்கும்
இன்ப உயிரே
இன்முகம் காண
ஏங்குது எம் மனம்
இரவில் தனிமையில்
அழுகிறோம் தனிமையில்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

