ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இந்திராதேவி நாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இந்திராதேவி நாகராஜா

நாகேஸ்வரி பாலர் பாடசாலை ஆசிரியை

வயது 7319 ஏப்ரல், 1946 – 5 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
சுன்னாகம், Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலையத்தடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் டாக்டர் சுப்ரமணியம் வீதியை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திராதேவி நாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா!

கற்றுத்தந்ததை நினைத்துப் பார்க்கவா?
பற்று வைத்ததைப் பகிர்ந்து கொள்ளவா?
சுற்றுத் தருணங்கள் தந்ததை நினைக்கவா?
இற்றுவிடா வாழ்வு தந்ததை வியக்கவா? நீங்கள்
அற்றுப் போய் விட்டதை எண்ணிக் கலங்கவா?
ஓராண்டு காலம் உருண்டோடி விட்டாலும்
பல்லாண்டுப் பொக்கிஷங்கள் பதித்தே உள்ளதம்மா?
எல்லாமே கடந்து போகும் என்பார்கள்
கடந்தது பன்னிரு மாதங்கள் மட்டுமே தான்
நீங்கள் இல்லாத வாழ்க்கைப் புத்தகம்
இலக்கண இலக்கியம் தடுமாறிய கவிதைப் புத்தகம் தான்
எம் வாழ்க்கைப் புத்தகப் பக்கங்களிலே....
எங்கள் அத்தியாயங்கள் சுவைமிகுந்தவை என்றால்
உங்கள் அத்தியாயங்கள் தரம் மிகுந்தவை அம்மா
வாசகன் அத்தியாயம் கிழிந்திருப்பான் எனில்
யாசகமாய் கேட்டு வாங்கியிருப்போம்
பறித்துக் கிழித்தவன் பாதகன் காலன் அல்லவா?
என் செய்வொம் நாமெல்லாம்? பரவாயில்லை
உள்வாங்கிய விடயங்கள் எம்மனச் சுவர் ஓவியங்கள்
பறிக்க முடியாது பத்திரமாய் பாதுகாப்போம்

உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள், பயன்தருமரங்கள் என அழகிய சுன்னாகத்தில் 19/APR/1946 இல் அதிபரான திரு.திருமதி நாகலிங்கம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளான இந்திராதேவி அவர்கள் சிவசோதிநாதன், ஸ்ரீசெல்வநாதன், இராஜநாதன், சபாநாதன், யோகநாதன், ஜெகநாதன், வனிதாமணி, இரவீந்திரநாதன் எனுன் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி நல்லதம்பி திருப்பதி தம்பதிகளின் அழகிய ஆண் அழகான நாகராஜா அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக ஹரிகரன், சசிகரன், சசிரேகா, சசிதரன், தர்ஷிகா போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ரமணா, விஜயகௌரி, பரீஸ்குமார், சாஜினி,ரிஷிகரன் போன்றோரை திருமணம் முடித்து வைத்து நிவேத், மைத்ரி, ரோஹித், கலைக்கோதை, சுடர்நிலா, கிரிஷான், கிரிஷிகா, சாய்அபின் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இந்திரா ரீச்சர் என அனைவராலும் விரும்பி அழைக்கப்படுவதுடன் நாகேஸ்வரி பாலர் பாடசாலை ஆசிரியராக கடமையாற்றிய இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 05.09.2019 இல் 73 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

எங்கள் ரீச்சர் எளிமை மனமே
உங்கள் சிரமத்தை உதறித்தள்ளி
அங்கம் முழுதும் அன்பை சுமந்த
தங்க மனமே தாய்மை உள்ளமே
எங்கே போனீர் எமை விட்டு.

பிற அறிவித்தல்கள்

  1. 6 செப்டம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 4 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.