1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயம்பிள்ளை நடராசா
வயது 8327 அக்டோபர், 1935 – 5 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 4ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிதி:25.07.2020
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே!
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
உன்னை நாம் பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்றும் அழியாது!
நீ மறைந்து ஓராண்டு போனதென்ன
உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவில் 27/OCT/1935 இல் திரு.திருமதி ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.நடராசா அவர்கள் சின்னத்தங்கம், இளையதம்பி, சின்னையா, செல்லம்மா, சிவக்கொழுந்து, தில்லையம்பலம் எனும் உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகள் பரமேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரன், புவனேஸ்வரன், கிருஸ்ணராணி, வேணீஸ்வரன், கல்பனா எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து செல்வராணி, சந்திரலதா, கருணாகரன், ஜெயா, பகீரதன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து சதீஸ்-றுபி, சகானா-சியாந், சிவதீஸ், பிரவீனா, நிசர்சனா, தனுசன், தாரணி, சினேகா, சர்மிதன், அனோச், அஸ்வின்-அபிநயா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது, நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05.08.2019 இல் 83 வயதில் புங்குடுதீவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
எங்கள் தந்தையே அன்புத் தெய்வமே
தங்கள் மனமே தெய்வ குணமே
கட்டி அணைத்திடும் கருணை உறவே
எட்டும் தூரத்தில் இல்லாமல் எங்கே போனீர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

