ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

பிறப்பு15 ஏப்ரல், 1945
இறப்பு26 அக்டோபர், 2018
ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் படம்

ஐயம்பிள்ளை சாந்தலிங்கம்

வயது 73

பிறந்த இடம்
புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
வேலணை கிழக்கு, சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Bern Ittigen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஐயம்பிள்ளை சாந்தலிங்கம் அவர்களின் 31ம் நினைவஞ்சலி.

அன்பிற்கு இலக்கணமாய்
பாசத்தின் உறைவிடமாய்
தரணியிலே என் அருகில்
எம் துணையாய் வாழ்ந்த என்னவரே
இவ்வுலகை விட்டு பிரிந்ததுதான் ஏனோ?

உன் பிரிவு என் வாழ்வில்
அழியாத நினைவலைகள்

அன்பையும் அறிவையும் அதிகமாய் தந்து
எனை வளர்த்த அப்பாவே
இந்த அவனியிலே எமை தவிக்கவிட்டு
அமைதியாய் சென்றீர்களோ

அப்பா உங்கள் பிரிவு என் இதயத்தில்
அணையாத சுடர்விளக்கு

நாம் கண் அயரும் நேரமெல்லாம்
கனவினிலே நீ வந்து எமை அழைக்கும்
உம் குரலே எம் செவிகளிலே ஒலிக்கிறது
உங்கள் நிஜமான வாழ்வுதான்
நிழலாகி போனதுவோ

கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனத்தோடும் உங்களுக்கு
நாம் அஞ்சலி செலுத்துகிறோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்.

உங்கள் பிரிவால் துயரும் மனைவி, மகன்,
மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.

என் கணவரின், அப்பாவின் பிரிவு செய்தி கேட்டு நேரில் வந்தவர்களுக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துயர் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மற்றும் அனைத்து வகைகளிலும் உதவி செய்தவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் 25-11-2018 அன்று Europaplatz 1, 3008 Bern, Switzerland எனும் முகவரியில் அமைந்துள்ள பேர்ன் ஞானலிங்கேஸ்வர ஆலய மண்டபத்தில் அன்னாரின் நினைவால் வழங்கப்படும் மதிய போசனத்தில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 13 நவம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 31 அக்டோபர், 20202ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.