1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை நாகேஸ்வரன்
வயது 4320 நவம்பர், 1964 – 29 அக்டோபர், 2008
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஉங்கள் பிரிவு உயிருள்ளவரை எமக்கு உறங்காத ஓலமையா
உங்கள் பிரிவு உறுதியானது என தெரிந்திருந்தால் – நான்
உங்களுக்கு முன்பே உறங்கியிருப்பேன் ஊரும் தூங்கியிருக்க
உறங்காமல் நானும் பிள்ளைகளும் உங்கள் வரவை பார்த்திருக்க
உங்களையழித்து எங்கள் உறவையறுத்துவிட்டhன் இறைவன்
உலகத்தில் இன்று நாம் அனாதைகளாக அழுகிறோம்
உங்களை நேசித்து உங்கள் பாதமே உலகமென இருந்ததற்கும்
இறைவனின் தண்டனையா எமக்கு?
அப்பா அப்பா என ஆளொரு அறையில் அழும் பிள்ளைகள் ஒரு புறம்
அயலவரும் அன்பர்களும் ஆறுதல் உரைத்தாலும்
உங்கள் ஆறுதல் போல்வருமா எமக்கு?
எங்கள் ஆருயிர் செல்லமே - அப்பாவே
உங்களைக் காணாமல் ஒரு வருடமாக தேடுகின்றோம்.
நீங்கள் போன இடம் தெரியாமல் தவிக்கின்றோம் - அப்பா
நீங்கள் வருவீர்கள் என யன்னல் வழியே கண்ணீர் மல்க
காத்து நிறகின்றோம் அப்பா
உங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய - காரணம்
வஞ்சகர்கள் செய்த சதியோ? - இல்லை
இறைவனின் விதி விளையாட்டோ?
நாம் அறியோம் அப்பா
என் அன்பு அத்தானே
உங்களைப் பிரிந்ததில்லை
எங்களுடன் அருகிலிருந்து இனிக்க இனிக்க பேசுவீர்களே
இன்று உங்களை இழந்து ஒரு வருடத்தில்
நான் என்னபாடுபட்டேன் அத்தான் இன்று உங்களைப் பிரிந்து
பிரிவு என்றால் அத்தான் என்று உணர வைத்துள்ளீர்கள்
எங்களை எல்லாம் ஆறாத்துயிலில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் செல்வத்தின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— மனைவி, பிள்ளைகள், மைத்துனன்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

