மரண அறிவித்தல்

ஐயாத்துரை மார்க்கண்டு
வயது 88, முன்னாள் பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்.
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கு, தெடுத்தனை இலுப்பையடியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி சாமியன் அரசடி, பிரித்தானியா Broadstairs, Kent ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை மார்க்கண்டு அவர்கள் 26-11-2018 திங்கட்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சின்னமணி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மாவதி(கனடா), பத்மநாதன்(கனடா), பாமதி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, கணேசன், இரத்தினம், செல்லம்மா, இலக்சுமி(இளையபிள்ளை), தருமலிங்கம் மற்றும் மாணிக்கம், சரஸ்வதி, பாக்கியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நவரத்தினம்(கனடா), ஜெயகலா(கனடா), மகேசன்(ரவி- பிரித்தானியா Broadstairs) ஆகியோரின் அன்பு மாமனாரும்
சப்தா, ருக்ஷக், மிதுஷா, ஹரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

