மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஐயாத்துரை சிவராசா
வயது 5122 பிப்ரவரி, 1965 – 1 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- புளியம்பொக்கணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணை கலவெட்டித்திடலை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவராசா அவர்கள் 01-09-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயாத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குணரட்ணம் தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாஜினி(ஆசிரியை- யாழ்/கரம்பகம் அ.த.க) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிலாஸ்(அபி- யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்), ஜெனகா(ஜெனா- விசுவமடு. ம.வி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நாகேஸ்வரி(காந்தி), மோகனதாஸ்(குஞ்சன்), குகதாஸ்(இத்தாம்பி- லண்டன்), புவனேஸ்வரி(புவனா- சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கந்தசாமி, புஸ்பா, வதனா(லண்டன்), ரவிக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிறீதரன்(ஜெர்மனி), மாலினி(கனடா), சுகந்தினி(கனடா), றமேஸ்தரன்(ஜெர்மனி), குணேஸ்தரன்(அவுஸ்திரேலியா), யோகவதனி, குவேந்தினி, வினோதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவினன், ரானுசா, அபிதா, அபிரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தரனுஜா, யதுர்சன், கிரிசாந், குவானு ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 10:00 மணி முதல் புளியம்பொக்கணை கலவெட்டித்திடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கலவெட்டித்திடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

