ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயரட்ணம் சர்வேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயரட்ணம் சர்வேஸ்வரி

வயது 8410 அக்டோபர், 1934 – 3 மே, 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
கொழும்பு வத்தளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் சர்வேஸ்வரி அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை சந்தானம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஞானாம்பிகை, சொர்ணகாந்தி, மகேசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அருந்தவகுமார், ஜெயதீஸ்வரி, ரட்னேஸ்வரி, கனகேஸ்வரி, கமலேஸ்வரி, ஜெயகுமார் , கௌரீஸ்வரி, சட்குணரட்ணம், மங்களேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரலதா, காலஞ்சென்ற ஜெகநாதன் , சற்குணசிகாமணி, ரட்ணசாமி, மணிவண்ணன் , தங்கராஜா, காலஞ்சென்ற சஹனாஸ், உபுல் சந்தன எராகொட, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஞ்சன், சஜீ, கீதா, தினேஸ், சுலக்‌ஷி, சுமதி, சஸ்மினா, கவாஸ்கர், குனேஷ், ரவிஷ்கர், ஷாமிலா, சுஜானி, லாவண்யா, ஜமேலா, சதீஷ், சுதேஸ், கேஷி, சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷயன், வருண், சஞ்ஜயன், அஜயன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப.01:00 மணியளவில் வத்தளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப. 02:30 மணியளவில்
கெரவளப்பிட்டிய மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும் நெல்வயல்கள்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் 10/Oct/1934 ஆம் ஆண்டில் தம்பிப்பிள்ளை சந்தானம் தம்பதிகளுக்கு அன்பு மகளாக சர்வேஸ்வரி அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் அழகிய ஆண் மகனான ஜெயரட்ணம் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து அருந்தவகுமார், ஜெயதீஸ்வரி, ரட்னேஸ்வரி, கனகேஸ்வரி, கமலேஸ்வரி, ஜெயகுமார், கௌரீஸ்வரி, சட்குணரட்ணம், மங்களேஸ்வரி, குமரேஸ்வரி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் தனது குடும்பத்தில் அக்கறை கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 03.05.2019 இல் 84 வயதில் கொழும்பில் உள்ள வத்தளையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"மானிப்பாயில் உதயமாகி
......நற்பண்பு காட்டி
நம் தாயாகி
......நன்மைகள் கூறி
பாசங்கள் பொழிந்து
.....பக்குவமாய் கவனித்து
பாலூட்டி வளர்த்து
......பிரிந்தது ஏனோ "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.