மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகநாதன் தர்மரூபி
வயது 6423 நவம்பர், 1954 – 13 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- வவுனிக்குளம், லியோன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Lyon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகநாதன் தர்மரூபி அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ராஜரட்னம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெகநாதன்(காந்தி) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜிதா(சுவிஸ்), கீத்தா(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தயாழன், ஜெகரூபன் மற்றும் தனுராஜன்(தனு- பிரான்ஸ்), ரேகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராமச்சந்திரன்(இலங்கை), தர்மராணி(லண்டன்), தர்மஜெயந்தி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தர்மபவானி, தர்மலதா மற்றும் தர்மசிறி(சுவிஸ்), தர்மமாலினி(சுவிஸ்), தர்மசுதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இரதிகரன்(பூக்குஞ்சு- சுவிஸ்), தர்மகுலசிங்கம்(குலம்- சுவிஸ்), துதர்சினி(தீபா- பிரான்ஸ்), ஜெயரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இலவோசன், கம்சாயினி, இலக்சன், நவின், கதிஜா, றிஸ்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் அச்சுவேலியில் தர்மலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளாக தர்மரூபி அவர்கள் 23.11.1954ஆம் ஆண்டு பிறந்தார்
இராமச்சந்திரன், தர்மராணி, தர்மஜெயந்தி, தர்மபவானி, தர்மலதா, தர்மசிறி, தர்மமாலினி, தர்மசுதா போன்ற உடன்பிறப்புகளுடன் ஓடி ஆடி விளையாடி, இனிமையாக குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அச்சுவேலியில் பிறந்த இவர் வவுனிக்குளத்தை வதிவிடமாகக் கொண்டு 1998ஆம் ஆண்டு பிரான்ஸ்ஸிற்கு குடிபெயர்ந்தார்.
அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து பெரியவளானதும் ராஜரட்னம் சிவபாக்கியம் தம்பதிகளின் அழகிய ஆண் மகனான ஜெகநாதன் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக விஜிதா, கீத்தா, தயாழன், ஜெகரூபன், தனுராஜன், ரேகா எனும் பிள்ளைகளைப் பெற்று பாசத்துடன் வளர்த்தார். தம் பிள்ளைக்கு இரதிகரன், தர்மகுலசிங்கம், துதர்சினி, ஜெயரூபன் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து, இலவோசன், கம்சாயினி, இலக்சன், நவின், கதிஜா, றிஸ்மியா எனும் பேரப்பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் ரூபி என அனைவராலும் அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் அனைவரிடத்திலும் பாசத்தை காட்டி அன்பாக பழகி வந்தார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.09.2019 இல் 64 வயதில் பிரான்ஸில் உள்ள Lyon நகரில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
"கண்ணாடி ரூப சொரூபமே
பண்பாடு நிறைந்த உள்ளமே
அன்பால் அனைவரையும் வாழ்த்தி
நெஞ்சால் உள்ளங்களைத் தழுவி
கண்ணீர் தாரையாக சிந்த
மண்ணில் சாய்ந்து வீழ்ந்த
மாசற்ற மணிக் கொழுந்தே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

