நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகதீஸ்வரி காராளபிள்ளை
வயது 741 மார்ச், 1945 – 17 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- வேலணை 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச்செய்திக் கேட்டு நேரில் வந்தும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி வழியாகவும், இணையத்தளங்கள் வழியாகவும் ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், மலர்வளையம் அனுப்பியவர்கள், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த வேலணை மேற்கு 7ஆம் வட்டாரத்தில் 01/MAR/1945 இல் திரு.திருமதி சின்னத்துரை ராசலட்சுமி தம்பதிகளின் அருமை மகளாய் ஜெகதீஸ்வரி அவர்கள் வீரசிங்கம், விஜயலட்சுமி, சிவானந்தம், அருளானந்தம், சொரூபராணி, செல்வராணி, யோகலட்சுமி எனும் உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி இளையதம்பி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகன் திரு. காராளபிள்ளை என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சதானந்தன், வாகினி, தர்சினி, சுதர்சினி, சிவகுமாரி, சூரியகுமாரி, இளங்குமரன், கார்த்திகா போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து சற்குணராஜா, தெய்வேந்திரம், சதானந்தராசா, சிவகுமார், விஜிதரன், சிரேஜா, குமரசோதி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து டினேஸ், தாட்சாயினி, சஞ்சய், திவாஜினி, அருணன், அட்சயா, அபிநயா, ஆரணி, தீபிகா, அக்சரன், ஆதவ், ஆதிக், அகரன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கனடா சென்று வாழ்ந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17.08.2019 இல் 74 வயதில் கல்வியங்காட்டில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
"புன்னகை முகமே புன் சிரிப்பே
இன்மொழிப் பேச்சே இனிமை உயிரே
கண்ணாக காத்தருளிய கருணை மனமே
என்னாலும் மறக்கோம் எங்கே போனீர்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

