மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெசி ஜெகசீலன்
வயது 316 ஜனவரி, 2016 – 16 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- Bristol
- வாழ்ந்த இடம்
- Bristol
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇங்கிலாந்தைப் பிறப்பிடமாகவும், Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெசி ஜெகசீலன் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், செம்மலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சகுந்தலா தம்பதிகள், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தவராசா(குஞ்சன்) பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
ஜெகசீலன் மிதிலா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
ஜஷ்வின் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பூபன் கவிதா(இலங்கை), சசி மாலினி(லண்டன்), சுதன் டிலானி(லண்டன்), பகீஷ்கரன் சதீசனா(இலங்கை), காலஞ்சென்ற முகுந்தன், குமார் மதுஷா(இலங்கை), ராகுல் அனோயி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
கிருபா பிரபா(இலங்கை), ஜெயா(இலங்கை), ஜெகன் ரேகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
தனுராஜ் பவிசாளினி(இலங்கை), ஜெய்சன் ஜயனி(லண்டன்), ஜசின் ஜாருஷா(லண்டன்), ஜயந் ஜஷ்ரின்(இலங்கை), பிரதீசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜெனிக்கா(லண்டன்), கர்ஷயன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,தெங்கு தோட்டம்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த முல்லைத்தீவை பூர்வீகமாக கொண்ட ஜெகசீலன் மிதிலா தம்பதிகளுக்கு,இங்கிலாந்து Bristol நகரில் 16/Jan/2016 ஆம் ஆண்டில் அழகு மகளாக ஜெசி அவர்கள் இவ் நாட்டில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் ஜஷ்வின் எனும் உடன் பிறந்த அண்ணாவுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து வந்ததுடன்,செம்மலை சுப்பிரமணியம் சகுந்தலா / புதுக்குடியிருப்பு தவராசா பராசக்தி தம்பதிகளுடன் பேத்தியாக தொலைபேசியில் செல்ல வார்த்தைகள் பேசி சிரித்து மகிழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவ்வாறு தந்தை, தாய், அண்ணா என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17-04-2019 இல் 03 வயதில் இங்கிலாந்தில் உள்ள Bristol நகரில் அகாலமரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
சிட்டு ஜெசி
...........
சிட்டுக் குருவி ஒன்று
சிறகொடிந்து வீழ்ந்தது
மண்ணில்வட்டமிட்டு கீச்சிட்ட குஞ்சு
வாழ்வு முடித்து சென்றது
பால் வடியும் வதனம் அதுபட்டென
போனது பலர் பேர் விம்மலுற
பார் படைத்த இறைவனோ
தவறை எண்ணி கண்ணீர் சிந்த
பைத்தியம் ஆனோம் நாம்
படைத்தவனுக்கு புரியுமோ
நோய் வந்து நொடிப் பொழுதில்
போய் முடியும் என நினைக்கவில்லை
தாய் மடியில் தாவிய உயிர்
தரணி துறக்கும் என கனவு காணவில்லை
தந்தை முகம் காண்பதையும்
தனையன் கூட பேசும் உறவும்
தத்தித் திருந்த சிந்து முகம்
எத்திப் போனது தூர தேசம்
எவர் வருவார் எமை மகிழ்விக்க
யார் வரினும் முடியாது
எம் சிட்டு ஜெசியின் சிரிப்பே
எமது உயிர் எமது வாழ்வு
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

