ஆறுதல்

மரண அறிவித்தல்

யேசுதாஸ் மேரி அன்ரனியா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யேசுதாஸ் மேரி அன்ரனியா

வயது 6412 மார்ச், 1955 – 15 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
பொலிகண்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாஸ் மேரி அன்ரனியா அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர் விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வெலிச்சோர் யேசுதாஸ்(மணி) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வன், வின்சன், பிறேமன், றூபன்(பிரான்ஸ்), ஜீவன்(பிரான்ஸ்), ஜீவா(பிரான்ஸ்), சறா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லேகா, காலஞ்சென்ற றொமினா மற்றும் றஞ்சினி, கவிதா, யேந்தி(பிரான்ஸ்), A.P போசன்(பிரான்ஸ்), அமலதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுயித் சிந்து, மதுசன், காலஞ்சென்றவர்களான திவ்வியா, அனோயன் மற்றும் மதுஷா, நிலா, அகல்விழி, அலஸ்வின், அகஸ்வின், றுசானி, அஜிதா, றுக்கிளி, கதிர்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுஜித்தா அவர்களின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற மலர் மற்றும் மரியநாயகம், செல்லக்கிளி மற்றும் மரியநாயகம், யோன் அல்பிறட், காலஞ்சென்ற செல்லக்கிளி மற்றும் ராணி, றஞ்சினி(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மங்களம், பரிமளம், நேசம்மா, தங்கா, லூயிஸ் மற்றும் ஆனந்தம்மா, மோசேஸ், ஞானேஸ்வரி, தேவன், இருதயநாதர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வைத்தியாம்பிள்ளை, காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மற்றும் புலோமிநாதர், காலஞ்சென்றவர்களான பாலையா, திரோசம்மா(தங்கமணி) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் வல்வெட்டித்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் நெல்வயலும் நீண்டு வளர்ந்த பனைமரங்களும்,ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய மானிப்பாயில் 12/MAR/1955 இல் திரு.திருமதி சவரிமுத்து திரேசம்மா தம்பதிகளின் அருமை மகளாய் மலர் ,மரியநாயகம், செல்லக்கிளி, மரியநாயகம், யோன் அல்பிறட், செல்லக்கிளி, ராணி, றஞ்சினி போன்ற சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி வெலிச்சோர் விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மகன் திரு.வெலிச்சோர் யேசுதாஸ் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக செல்வன், வின்சன், பிறேமன், றூபன், ஜீவன், ஜீவா, சறா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து லேகா, றொமினா,றஞ்சினி,கவிதா,யேந்தி,A p போசன்,அமலதாஸ் போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து சயித், மதுசன், திவ்வியா, அனோயன், மதுஷா, நிலா, அகல்விழி, அலஸ்வின், அகஸ்வின், றுசானி, அஜிதா, றுக்கிளி, கதிர்வினி எனும் பேரப்பிள்ளைகளுடனும், சுஜித்தா எனும் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் பிறேமா என அன்பாக அழைக்கப்படும் இவர் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 15.08.2019 இல் 64 வயதில் பொலிகண்டியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

”மானிப்பாய் மண்ணின் மகிழ்வான உறவே
பேணிப் பாதுகாத்த பாச உறவே
ஆசாரமாக வாழ்ந்த அன்பு உள்ளமே
ஆகாரம் விடுத்து அகிலத்தில் உழைத்து
வீழ்ந்தீரே மண்ணில் அந்திச் சூரியனாய்”

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.