நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயலட்சுமி நடேசன்
ஓய்வுபெற்ற உப தபால் அதிபர் - ஆனைப்பந்தி
வயது 7821 ஜனவரி, 1941 – 2 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- ஆனைப்பந்தி
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான யாழ்ப்பாணத்தின் ஆனைப்பந்தியில் 21/JAN/1941 இல் திரு.திருமதி கணேசன் ஜெகதாம்பாள் தம்பதிகளின் அன்பு உள்ளமாக ஜெயலட்சுமி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ஜெயராஜா, ஜெயச்சந்திரன், ஜெகநாதன், ஜெயசுந்தரி, ஜெயபாலன், ஜெயராணி, ஜெகீஸ்வரி போன்ற சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி நல்லம்மா காசிப்பிள்ளை தம்பதிகளின் மகனான நடேசன் காசிப்பிள்ளை எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.
இவர்கள் இருவரின் வாழ்க்கைப் பயனாக காயத்திரி, சயந்திரி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து அன்புச்செல்வன் என்பவரை திருமணம் முடித்து வைத்து சிறீநிதி போன்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் ஆனைப்பந்தி உபதபால் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளை, உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 02.10.2019 இல் 78 வயதில் கொழும்பில் உள்ள வெள்ளவத்தை நகரில் இயற்கை மரணம் அடைந்தார்.
கல்வியறிவு கூடிய கருணை உறவே
எல்லை இல்லா இன்பத்தை எமக்கு அருளி
வல்ல மனம் படைத்த வள்ளல் உள்ளமே
நிம்மை நினைத்து நித்தம் ஏங்கி
உம்மைப் பிரிந்து உள்ளம் உருகித் தவிக்கிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

