மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா
ஜெயம், மங்கலம்
வயது 9325 பிப்ரவரி, 1926 – 10 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- அல்வாய்
- வாழ்ந்த இடம்
- ஹற்றன், கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஹற்றன், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமங்கலேஸ்வரி சேனாதிராஜா அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கம்மா வெற்றிவேல் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான அழகம்மா செல்வதுரை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாவிட்டபுரம் பழை மிதியாவலையைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வதுரை சேனாதிராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,
சாந்திகுமார்(கொழும்பு), ராஜ்குமார்(லண்டன்), சியாமளா(கனடா), ஜெயக்குமார்(ஐக்கிய அமெரிக்கா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கெளரி(கொழும்பு), அருனா(லண்டன்), காலஞ்சென்ற வரதராஜா, தயாலினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான Dr. வெ. செல்வரட்னம், சிவஞானரட்னம் மற்றும் பரமேஸ்வரி பரராஜசிங்கம்(கனடா), ஆனந்தரட்னம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரராசசிங்கம்(கனடா), பானுமதி ஆனந்தரட்னம்(கனடா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி செல்வரட்னம், மகேஸ்வரி சிவஞானரட்னம், மாருதபிறவீகவல்லி செல்லையா, சிவபாக்கியம் திடவீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகன்னியா திலக்ராஜ்குமார்(யாழ்ப்பாணம்), கீதாஞ்சலி உமாசுதன்(லண்டன்), திபாகரன்(கனடா), அகிலன்(கனடா), ஞானேஸ்வரி பாலசந்திரன்(கொழும்பு), மங்கையற்கரசி பொன்னம்பலம்(கட்டுடை), பத்மாவதி செல்லையா(மாவிட்டபுரம்), ராஜேஸ்வரி செல்லையா(மாவிட்டபுரம்), காலஞ்சென்ற செ. பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியும்,
டிலன், மகிமன், ஆதித்தன், சிவப்பிரியா, ஆதவன், ஐங்கரன், அபினா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Jeyamangaleswary Senathirajah was born in Vadamaradchi Alvai Jaffna, lived in Hatton and Colombo, passed away peacefully on 10th August 2019 in London.
Beloved wife of Late Mr. Selladurai Senathirajah.
Daughter of the Late Mr & Mrs Vettivelu.
Daughter-in-law of Late Mr & Mrs Sellathurai.
Loving mother of Shanthikumar(Colombo), Rajkumar(London), Shyamala(Canada), Jeyakumar(USA), Sasikala(London).
Loving mother-in-law of Gowri Shanthikumar, Aruna Rajkumar, late. S. Varatharajah, Thayalini Jeyakumar.
Loving grandmother of Dillon, Mahimann, Artheelthan, Sivapriya, Aathaavan, Aiyankaran, Abina, Abishan.
Beloved Sister of late Dr. Selvaratnam, Mrs. Parameswary Pararasasingam(Canada), late Sivagnanaratnam, Mr. Anandaratnam(Canada).
Loving Sister-in-law Mr. Pararasasingam(Canada), Mrs. Bhanumathy Anandaratnam(Canada), late Parameswary Selvaratnam, Maheswary Sivagnanaratnam, Maruthapiravehavalli Chelliah, Sivapackiyam Thidaveerasingham.
Loving Aunt of Suganiya, Geetha, Thibaharan, Ahilan, Mrs. Gnaneswary Balachandran, Mrs. Mangai Ponnampalamuthalliyar, Pathmavathi Chelliah, Rajeswary Chelliah, late Mr. Balakrishnan.
This Notice is provided for all family and friends.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,கற்பகதரு நிறைந்து காணப்படுவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வடமராட்சி அல்வாயில் 25/FEB/1926 இல் திரு.திருமதி தங்கம்மா வெற்றிவேல் தம்பதிகளின் அருமை மகளாய் ஜெயமங்கலேஸ்வரி அவர்கள் Dr.வெ.செல்வரட்ணம், சிவஞானரட்னம், பரமேஸ்வரி பரராஜசிங்கம், ஆனந்தரட்னம் போன்ற சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் மாவிட்டபுரம் திரு.திருமதி அழகம்மா செல்வதுரை தம்பதிகளின் அன்பு மகன் திரு.சேனாதிராஜா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சாந்திகுமார், ராஜ்குமார், சியாமளா, ஜெயக்குமார், சசிகலா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து கௌரி, அருனா, வரதராஜா, தயாலினி போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து டிலன், மகிமன், ஆதித்தன், சிவப்பிரியா, ஆதவன், ஐங்கரன், அபினா, அபிஷன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் ஹற்றன்,கொழும்பு என்பவற்றில் வாழ்ந்த இவர் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும், ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.08.2019 இல் 93 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
"கஸ்ரங்கள் விலக்கி கடமையை செய்து
இஸ்ர மனதுடன் இன்பமாய் வாழ்ந்த
புஸ்ப குணமே உங்கள் குணம்
விஸ்வ ரூபமாகி விடிவைத் தந்த
இஸ்ர தேவதையே எங்கே போனீர்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

