ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயமனோகர் மாணிக்கநடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயமனோகர் மாணிக்கநடராசா

பழைய மாணவர்- கொக்குவில் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரி, இளைப்பாறிய கணக்காளர்

வயது 662 ஜனவரி, 1953 – 27 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
சுண்டுக்குழி, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப்பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி,Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயமனோகர் மாணிக்கநடராசா அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று Toronto வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்க நடராசா ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசேகரம் சவுந்திரவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, சங்கமித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரான்சிஸ்கோ, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஐஷானி, றேயா, றேஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லோகநாயகி வைரவிப்பிள்ளை, ருக்மணிதேவி நடராஜன், காலஞ்சென்றவர்களான ஞானசுந்தரம், ஞானசம்பந்தன், மற்றும் கருணாதேவி ஆகியோரின் பெறாமகனும்,

கமலமனோஹரி, காலஞ்சென்ற மகானந்தன், ஸ்ரீதரன்(அவுஸ்திரேலியா), கருணாகரன், ஜெகன்மோகன், கெளரிமனோஹரி(அவுஸ்திரேலியா), ரமாமனோஹரி, சுந்தரமோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற யுகேந்திரன், சிவாஜினி, பிரியாந்தி(அவுஸ்திரேலியா), சுபசீலி, கலைவாணி, பாலகுமார்(அவுஸ்திரேலியா), குலநாயகம், வாசுகி, ரவீந்திரன், சந்திரகாந்தி, சுரேந்திரன், சுசீத்தா, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கொக்குவிலில் புகழ் பூத்த சீமான் திரு.மாணிக்கநடராசா அவர்தம் பாரியார் ஜெகசோதி அவர்களின் அன்பு மகனாக 02/JAN/1953 ஆம் ஆண்டில் திரு.ஜெயமனோகர் அவர்கள் கமலமனோஹரி, மகானந்தன், ஸ்ரீதரன், கருணாகரன், ஜெகன்மோகன், கௌரிமனோஹரி, ரமாமனோஹரி, சுந்தரமோகன் எனும் உடன்பிறப்புடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து உயர்நிலை அடைந்த இவர் திரு.திருமதி சிவசேகரம் சவுந்திரவதி தம்பதிகளின் அன்பு மகளான ராஜினி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சங்கீதா,சங்கமித்தா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்ந்து பிரான்சிஸ்கோ, பிரதீபன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து ஐஷானி, றேயா, றேஷான் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் கொக்குவில் இந்துக்கல்லூரி, மானிப்பாய் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும், கணக்காளராக சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன், அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 27.08.2019 இல் 66 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

புன்னகை முகமுடன்
வெண் மீசை கொண்டு
கண்ணெதிரே தோண்றுவீரே
அன்பு மனம் மாறாது
அள்ளி அணைத்த உயிரே
தள்ளிப் போனீரே தவிக்கிறோம் இன்று.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.