மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயராணி இம்மானுவேல்
வயது 6421 நவம்பர், 1954 – 12 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- டுசில்டோஃப்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Düsseldorf ஐ வதிவிடமாகவும் கொண்ட இம்மானுவேல் ஜெயராணி அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிறேட் பிரான்சிஸ் ராசு குணரத்தினம் ராசு தம்பதிகளின் அன்பு மகளும், திருச்செல்வம் லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இம்மானுவேல்(ரட்ணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
லூட்சியா அவர்களின் அன்புத் தாயாரும்,
லூத்து பாலச்சந்திரன்(யாழ்ப்பாணம்), றெஜீனா சிவஞானம்(Neuss- ஜேர்மனி), டெக்ஸ்டர்(ஜெறிம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை(ஜேர்மனி), மைக்கல்(யாழ்ப்பாணம்), ஜெயராஜகுலேந்திரன் கில்டா(யாழ்ப்பாணம்), யோசப்(ஜேர்மனி), அலெக்ஸ் லம்பேட்(ஜேர்மனி), அன்ரன்மெல்(ஜேர்மனி), லிப்டன்(லண்டன்), கட்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டெக்ஸ்டர் எமிலி அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவ, கிறித்தவ பாரம்பரியம் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தின் அருகில் மக்கள் செறிந்து வாழும் பகுதியான சுண்டுக்குழியில் 21/NOV/1954 இல் திரு.திருமதி அல்பிறேட் பிரான்சிஸ் ராசு குணரத்தினம் ராசு தம்பதிகளின் அருமை மகளாய் ஜெயராணி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி திருச்செல்வம் லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகன் இம்மானுவேல்(ரட்ணம்) என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக லூட்சியா எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வவா என்றும் ஜெயா எனவும் அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும்,அன்பு பாசம் நிறைந்து கானப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு வாழ்ந்தார். இவ்வாறு கணவன், பிள்ளை, உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 12.08.2019 இல் 64 வயதில் ஜேர்மனியில் உள்ள Dusseldorf நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
சுண்டுக்குழி மண்ணின் சுந்தர வதனமே
பண்பட்ட மனதுடன் பாசம் பொழிந்து
வெண் மலர் போல் வாசம் வீசி
கண் பட்டு வீழ்ந்தீரே கரு உறவே
என்னென்று சொல்வேம் எம் நிலையை
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

