ஆறுதல்

மரண அறிவித்தல்

யோண் பெலிசியா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோண் பெலிசியா

வயது 4822 மார்ச், 1971 – 27 ஜூன், 2019

பிறந்த இடம்
குருநகர்
வாழ்ந்த இடம்
குருநகர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோண் பெலிசியா அவர்கள் 27-06-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யோண், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

செரோன், பூமா, எப்ரோன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ரவி, கொண்சி(லண்டன்), ஜசோதா(பிரான்ஸ்), கென்றிக்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சைலா, வரதன்(லண்டன்), எட்வேட்(பிரான்ஸ்), பிறேமன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெனி, றொசானி, றஜி, றொகிலா, றொக்‌ஷன், டனிஸ்ரன், றொக்‌ஷி, றொஷாந்தன், றொயேட்சன், காலஞ்சென்ற மீனுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சசி டினோ(லண்டன்), விபித்(லண்டன்), வேர்ஜினியா(பிரான்ஸ்), அனோஜினி(பிரான்ஸ்), இலக்கியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

ஜதுஷன்(பிரான்ஸ்), நிதுஷா(பிரான்ஸ்), சைனு(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-06-2019 சனிக்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைதொடர்ந்து புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ளதும் மக்கள் மிகச் செறிந்து வாழும் பகுதியும் வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், கடலுணவுகள்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த குருநகரில் 22/MAR /1971 ஆம் ஆண்டு யோண் திரேசம்மா தம்பதிகளுக்கு அழகிய பெண் குழந்தையாக பெலிசியா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் ரவி, கொண்சி, ஜசோதா, கென்றிக்கா போன்ற உறவுகளுடன் பிறந்து குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து செரோன், பூமா, எப்ரோன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார். அத்துடன் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கியதுடன் சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 27.06.2019 இல் 48 வயதில் குருநகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

அழகுக் குயிலே அன்பில்
மலையே
பழம் போல் இனிக்கும்
குரலே
நிழல் போல் எமை
பாதுகாத்து
நிஜமாய் வாழ்ந்து நித்தம்
உதவி
கனவில் வாழும் கால
உயிரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.