ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜொஸ்லின் பற்றிக் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜொஸ்லின் பற்றிக்

வயது 4818 செப்டம்பர், 1970 – 1 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜொஸ்லின் பற்றிக் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், மரியநாயகம் வினித்தியா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ராஜசுரியர் Bridget தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பற்றிக் ராஜசூரியர்(ஆனந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,

லரிசா, லேயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேஷ்(கனடா), மிராணி(லண்டன்), சித்ராணி(அவுஸ்திரேலியா), நிரஞ்சன்(லண்டன்), ரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெனின், டெனி ஆகியோரின் அன்பு மாமியும்,

நிலோஷ், நிருஷா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

Joshua, ஜெனாதன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

அமலராஜ், பாலரட்ணம், விவேகானந்தராஜன், ஜீவித்தா, நிரஞ்சனா, தேவா(லண்டன்), தேவானந்தி(இலங்கை), காமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Devona, Davina ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் கரம்பொன்னில் மரியநாயகம் வினித்தியா தம்பதிகளின் பாசமிகு புதல்வியாக ஜொஸ்லின் அவர்கள் 18.09.1970ஆம் ஆண்டு பிறந்தார். சுரேஷ், மிராணி, சித்ராணி, நிரஞ்சன், ரூபன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்த இவர் இளமைப்பருவதிலேயே படிப்பில் அதிக நாட்டம் கொண்டவர்.

நிவானி என சுற்றத்தார் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட இவர், தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஆசிரியராக பணிபுரிய தொடங்கினார். வளர்ந்து பெரியவளானதும் ராஜசுரியர் Bridget தம்பதிகளின் அன்பு மகனான பற்றிக் ராஜசூரியர் என்பவரைத் திருமணம் முடித்து இலங்கையிலிருந்து பிரான்ஸிற்கு 2001ம் ஆண்டு குடிபெயர்ந்த இவர் அங்கும் தனது ஆசிரியர் பணியை செம்மையாக செய்து வந்தார்.லரிசா, லேயா என்ற இரு பெண்களை பெற்று நற்பண்புகளை போதித்து வளர்த்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

Piano வாசிப்பதில் அலாதி விருப்பம் கொண்ட இவர், பாடல்களை கேட்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார். மேலும் நண்பர்கள், உறவுகளிடம் அதிக அன்பு காட்டுபவராகவும், தேவாலயங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவராகவும் விளங்கினார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 01.09.2019 இல் 48 வயதில் பிரான்ஸில் தனது இளம்பயதிலேயே இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"கரம்பொன் உறவே
...........கலங்கா விழியே
நிரப்பி வளியும்
..........நித்தம் புன்னகை
கரம்பற்றி பாதை
...........காட்டி உயர்த்தி
வரம்பின்றி அழவைத்து
...........போன உறவே"

பிற அறிவித்தல்கள்

  1. 30 செப்டம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 13 செப்டம்பர், 20201st Year Remembranceஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.