ஆறுதல்

மரண அறிவித்தல்

யோசப் அன்னறோசலின் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யோசப் அன்னறோசலின்

ஓய்வுபெற்ற ஆசிரியை- புனித மரியாள் மகளிர் பாடசாலை ஊர்காவற்துறை

வயது 8115 டிசம்பர், 1937 – 25 ஜூன், 2019

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
கனடா, கொழும்புத்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும், யாழ். கொழும்புத்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட யோசப் அன்னறோசலின் அவர்கள் 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் சூசன் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை மாரிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற யோசப் ஐயாத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

டன்ஸ்ரன்(கனடா), அனா வேர்ஜினி(இலங்கை), றெஜிக்கிளஸ்ரன்(நெதர்லாந்து), சோபியா ஜெயந்தினி(இலங்கை), ஆன் யாழினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாசுகி(கனடா), சுதர்சினி(நெதர்லாந்து), றெக்ஸ்(இலங்கை), றிச்சாட்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சந்தணம், மரியம்மா, அமிர்தம், மேரிப்பிள்ளை, அந்தோனிப் பர்னாந்து, அருளானந்தம், மற்றும் சந்தணமலர்(கனடா), செபஸ்ரியாம்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகராஜா(கனடா), காலஞ்சென்ற யோகராணி, புஸ்பராணி(இலங்கை), தர்மயோதி(இலங்கை), தேவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஐரிஷா, அஸ்னி, இனிசா, ஜொலின், அடம், றித்திக், றியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-06-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் யாழ். கொழும்புத்துறை செபமாலை அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேந்தி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த ஊர்காவற்துறையில் 15/DEC/1937 இல் திரு.திருமதி ஞானப்பிரகாசம் சூசன் அவர்களின் அருமைப் புத்திரியாக அன்னறோசலின் அவர்கள் சந்தணம், மரியம்மா, அமிர்தம், மேரிப்பிள்ளை, அந்தோனிப் பர்னாந்து, அருளானந்தம், சந்தணமலர், செபஸ்ரியாம்பிள்ளை போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திரு.திருமதி ஐயாத்துரை மாரிமுத்து தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான திரு.யோசப் ஐயாத்துரை அவர்களைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து டன்ஸ்ரன், அனாவேர்ஜினி, றெஜிக்கிளஸ்ரன், சோபியா ஜெயந்தினி, ஆன் யாழினி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து வாசுகி, சுதர்சினி, றெக்ஸ், றிச்சாட் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து ஐரிஷா, அஸ்னி, இனிசா, ஜொலின், அடம், றித்திக், றியா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் ஊர்காவற்துறை புனித மரியாள் மகளிர் பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.06.2019 இல் 81 வயதில் கொழும்புத்துறையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்

தீவின் அழகிய திரை
கடலே
வாழ்வின் நற் குணம்
நிறைந்தாரே
நாவின் உண்மைகள் தவறாது
வாழ்ந்து
சாவில் வீழ்ந்தீரே சரித்திரம்
படைத்தீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.