மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசப்பின் சௌந்தரி யேசுதாசன்
வயது 8725 ஜூலை, 1931 – 20 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- சுண்டிக்குளி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும, சுண்டிக்குழி கச்சேரியடியை வசிப்பிடமாகவும் கொண்ட யோசப்பின் சௌந்தரி யேசுதாசன் அவர்கள் 20-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு கந்தையா அமிர்தநாதர் ஆன்பொன்றோஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை சாமிநாதர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வின்சன் யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
மொறின்(றூபா- கனடா), பிராங்(லண்டன்), நிரஞ்சன்(கனடா), டொறின்(மீரா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற லோறன்சியா கமலம், றீற்ரா(கனடா), காலஞ்சென்ற அன்ரன் குணசேகரம், அரியமலர்(கனடா), அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வமோகன், ஆன், செல்வராணி, இராசசூரியர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வரப்பிரகாசம், சந்திரா குணசேகரம், இராமநாதன் சீவரத்தினம், காலஞ்சென்ற சாமிநாதர் லிகோரி, செலஸ்ரீன் சாமிநாதர்(சின்னக்கா) ஆகியோரின் மைத்துனியும்,
யூடி, மரியோ, விவியன், நத்தானியல், துவாரகா, டீப்திகா, ரைரோன், றமோன், யோவானா, கரீம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 24-07-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் யாழ். தூய திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் தூய மரியன்னை கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக் கூட்டங்களில் பெரியதும், கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நெடுந்தீவில் 25/Jul/1931 இல் திரு.தம்பு கந்தையா அமிர்தநாதர் ஆன்பொன்றோஸ் தம்பதிகளின் அருமை மகளாய் யோசப்பின் சௌந்தரி அவர்கள் லோறன்சியா கமலம், றீற்ரா, அன்ரன் குணசேகரம், அரியமலர், அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயசேகரம் எனும் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் வஸ்தியாம்பிள்ளை சாமிநாதர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு.வின்சன் யேசுதாசன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக மொறின், பிராங், நிரஞ்சன், டொறின் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து செல்வமோகன், ஆன், செல்வராணி, இராசசூரியர் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து யூடி, மரியோ, விவியன், நத்தானியல், துவாரகா, டீப்திகா, ரைரோன், றமோன், யோவானா, கரீம் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 20.07.2019 இல் 87 வயதில் சுண்டிக்குழியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
நெடுந்தீவு தந்த
......நிஜ உறவே
படும்பாடு பட்டு
......உழைத்திட்ட உயிரே
கடுமையான உலகில்
...... கலங்காது வாழ்ந்து
எங்கே போனீர்
........ எமை விட்டு
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

