மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கத்ரி கோபால்நாத்
பிரபல சாக்சபோன் இசைக்கலைஞர்
வயது 6911 டிசம்பர், 1949 – 11 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- Mangalore
- வாழ்ந்த இடம்
- Mangalore
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபிரபல சாக்சபோன் இசைக்கலைஞர் தனது இசையால் மக்களின் மனங்களை வென்ற கத்ரி கோபால்நாத் அவர்களின் மறைவிற்கு Aruthal, ஐ பி சி, தமிழ்வின், லங்காசிறி இணையத்தளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.
வாழ்க்கை வரலாறு
கத்ரி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூரில் தனியப்பா, கங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனாக 1949ம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தார். கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞர். ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தபோது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டார்.
மேலைநாட்டு காற்றுக் கருவியான சாக்சபோனைக் கற்றுத் தேர்ந்து ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசை கொண்ட இவர்மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பதைக் கற்றார் கோபால்நாத். பிறகு சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார்.கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகாந்த் இசையமைப்பாளராக உள்ளார்.
முழுக் கதையையும் வாசிக்க
இயக்குநர் கே.பாலசந்தரின் முயற்சியால் ‘டூயட்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றினார். அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களிலும் சாக்ஸபோன் இசை இடம் பெற்றிருக்கும். டூயட் படம் இவரைத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து பெரிய பெருமை தேடித் தந்தது.
கர்நாடக கலாஸ்ரீ, பத்மஸ்ரீ, கலைமாமணி, சாக்ஸபோன் சாம்ராட், நாத கலாநிதி, சங்கீத வாத்திய ரத்னா, சங்கீத கலாசிகாமணி போன்ற பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார் கத்ரி கோபால்நாத்.
அமெரிக்காவைச் சேர்ந்த சாக்சபோன் கலைஞரும் இசையமைப்பாளருமான ருத்ரேசு மகந்தப்பா என்பவருடன் 2005ஆம் ஆண்டு முதற்கொண்டு இணைந்து பணியாற்றினார் கோபால்நாத். இதன் பலனாக 'கின்ஸ்மென்' (Kinsmen) எனும் இசைத் தொகுப்பு வெளியானது. 'ஈஸ்ட்-வெஸ்ட்' (East-West) எனும் ஒலி-ஒளி வழங்குதலையும் வெளியிட்டுள்ளார். இந்திய-மேற்கத்திய இசைக் கலப்பினை இத்தொகுப்பில் இவர் செய்துள்ளார்.
இந்தியாவின் தியாகராஜர், செருமனியின் பேத்தோவன் போன்றோரின் இசையை உள்ளடக்கிய இந்த இசைத் தொகுப்பு தயாராக 6 மாதங்களானது. லண்டன் பிபிசி நடத்தும் ‘உல்லாசவீதி’ (BBC Promenade) எனும் இசைவிழாவில் 1994ஆம் ஆண்டு தனது இசையை வழங்கினார். பிபிசி நடத்தும் இசைவிழாவிற்கு அழைக்கப்பட்ட முதல் கருநாடக இசைக் கலைஞர் எனும் பெருமை இவருக்குக் கிடைத்தது. லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடந்த இவரின் நிகழ்ச்சிக்கு ஐக்கிய இராச்சியத்திலுள்ள ‘ஆசியன் மியூசிக் சர்க்கியூட்’ எனும் அமைப்பு புரவலராக இருந்தது.
பிரபல கருநாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர், கத்ரி கோபால்நாத்தை ‘மெய்யான கருநாடக இசை மேதை’ என பாராட்டியிருந்தார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கத்ரி கோபால்நாத் சிகிச்சை பலனின்றி 11/10/2019 இல் தனது 69 வயதில் மங்களூரில் காலமானார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்போம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

