மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கைலாசப்பிள்ளை கணேசலிங்கம்
Mascons உத்தியோகத்தர் - கொழும்பு
வயது 7017 ஏப்ரல், 1949 – 25 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசப்பிள்ளை கணேசலிங்கம் அவர்கள் 25-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை(Malayan Pensioner) அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிபிரமன், வினோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவநாத் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற விக்னராஜா, காங்கேசன், காலஞ்சென்ற தனபாக்கியம், இராசலட்சுமி, இராசநாயகம்(பம்பர்), காலஞ்சென்ற தியாகராஜா, காலஞ்சென்ற சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஞ்சிதமலர், சிறிதர்சினி, சுசிலா, திருநாவுக்கரசு, நிரஞ்சன், ஜெயலீலா, காலஞ்சென்ற யோகராணி, அற்புதராணி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், பாலசுப்பிரமணியம், நிர்மலாதேவி, சுதந்திராதேவி, கலாவதி, கணேஷ், சத்தி, ரேகா, சிராணி, ஜெயமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுமதி, நிரன்ஜன், பாமினி, குமுதினி, விஜய் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பவானி, ஜெயகாந்தன், துஷ்யந்தன், சுபாஷினி, சாந்தினி, நிமலன், கைலேஷ், குமார், கைலேஷ், காந்த, சுஜீவா, ரமணா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் புகழ் பூத்த சீமான் திரு. கைலாசப்பிள்ளை அவர்தம் பாரியார் அன்னமுத்து அவர்களின் அருமைப் புத்திரனாக 17/APR/1949 ஆம் ஆண்டில் திரு.கணேசலிங்கம் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும், விக்னராஜா, காங்கேசன், தனபாக்கியம், இராசலட்சுமி, இராசநாயகம், தியாகராஜா, சுந்தரலிங்கம் போன்ற சகோதரர்களுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.திருமதி ஜெயசிங்கம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகள் குணதர்சினி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சிறிபிரமன், வினோதினி எனும் அழகுப் பிள்ளையைப் பெற்று வளர்த்து சிவநாத் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் குஞ்சன் என அன்பாக அழைக்கப்படும் இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் பழைய திரைப்படங்கள் பார்ப்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் அத்துடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார்,
இவ்வாறு மனைவி,பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 25.09.2019 இல் 70 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
மானிப்பாய் தந்த மகத்தான உறவே
ஏணிப் படி போல் எங்களை ஏற்றிய
என் உயிரே எங்கள் தந்தையே
மறக்க முடியவில்லை மனம் கலங்கி
அழுத கண்ணீருடன் ஆசையுடன் தேடுகிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

