ஆறுதல்

மரண அறிவித்தல்

கமலாதேவி முத்துலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கமலாதேவி முத்துலிங்கம்

இளைப்பாறிய பிரதி அதிபர்- கிளி/இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலை

வயது 7430 மார்ச், 1945 – 17 பிப்ரவரி, 2020

பிறந்த இடம்
இருபாலை
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி முத்துலிங்கம் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி செல்லத்துரை(ஆசிரியை), சற்குணதேவி இராசா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. கஜானா கெங்காதரன், Dr. கஜன், துசாயினி கிரிகரன்(லண்டன்), வேனிலான் இராசா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

கெங்காதரன், Dr. டிமாலினி, கிரிகரன், நிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்லத்துரை(ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான இராசா(ஆசிரியர்), அ.பாக்கியலக்சுமி, சி.பாலசிங்கம் மற்றும் சி.கந்தசாமி, செ.கிருஷ்ணாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 16 மார்ச், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.