ஆறுதல்

நன்றி நவிலல்

கமலாதேவி பரமநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கமலாதேவி பரமநாதன்

வயது 8821 செப்டம்பர், 1931 – 9 நவம்பர், 2019

பிறந்த இடம்
காங்கேசன்துறை
வாழ்ந்த இடம்
மெல்போன், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் உடனடியாக எம்மில்லம் நாடி ஓடி வந்து வேண்டிய உதவிகள் செய்த உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும், துக்கம் விசாரித்தவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் வைத்து சாந்தி அஞ்சலி செலுத்தியவர்கள் இன்னும் ஏனைய நெஞ்சங்கட்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் காங்கேசன்துறையில் 21/SEP/1931 ஆம் ஆண்டில் திரு.திருமதி கந்தையா மாணிக்கம் தம்பதிகளுக்கு அழகுக் குழந்தையாக கமலாதேவி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பாலகிருஷ்ணன், பரஞ்சோதி, குமாரசாமி, கனகாம்பிகை, சோமசுந்தரம் போன்ற சகோதரங்களுடன் குறும்பு செய்து வளர்ந்து பெரியவராகியதும், திரு திருமதி செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் V.C பரமநாதன் எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தார். இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் வம்ச விருத்தியாக விக்னேஸ்வரன், யோகேஸ்வரன், ஞானேஸ்வரன், ஜமுனா, ஆனந்தீஸ்வரன், மகாரஞ்சினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

பிள்ளைகள் பெரியவர்களானதும் சிவசக்தி, ரட்ணாம்பாள், ரேணுகா, கணேசன், இந்திராணி, ஈஸ்வராணந்தம் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாதங்கி, மதுரன், கபிலன், நித்யன், வர்ஷினி, ஷோபன், சதுரா, கீதன், நிவேதா, மித்திரம், ரிஷித்திரன், பவித்ரன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் அவுஸ்திரேலியா மெல்போனில் வாழ்ந்தது மட்டுமல்லாது கொழும்பிலும் பல காலம் வாழ்ந்த இவர் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், சுவையான உணவுகள் செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 09.11.2019 இல் 88 வயதில் கொழும்பில் மரணம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 11 நவம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.