நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலம் கந்தசாமி
வயது 8321 மார்ச், 1936 – 10 ஜூன், 2019
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு, தாவடி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி தெற்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலம் கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.
அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும்
நீ பெற்ற ஆறு முத்துகளும்
கண்ணீரில் கரைகின்றோம்
காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Eraa Palace, 10 Karachi Dr, Markham, ON L3S 0B5, Canada எனும் முகவரியில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நெல்வயலும், ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தின் கொக்குவில் மேற்கில் 21/Mar/1936 இல் திரு திருமதி.பொன்னுத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாக கமலம் அவர்கள் கனகராசா, சண்முக சுந்தரம், மகாதேவன், மகேஸ்வரி, சிவலிங்கம், மலர், விஜயராஜா எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் அறிவும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு. திருமதி செல்லத்துரை சிவபாக்கியலட்சுமி தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான தபாலதிபர் செல்லத்துரை கந்தசாமி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தேவானந்தன், வித்தியா, விஜயானந்தன், நகுலானந்தன், ஜெயந்தி, நித்தியா போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து சாந்தரூபி, தவலிங்கம், நிர்மலா, சுலோஜனாதேவி, ஸ்ரீகாந்தன், நவநிதி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து தனுஜா, சர்மினி, நிஷாந், கார்த்திகா, சோபிதா, பிரவிந், நிரோஷன், நிவேதன், தீபிகா, பிரியாந், பிரியங்கா, சுபாங்கி, சித்திராங்கி, சோபினி, சானியா, ஷாலினி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.06.2019 இல் 83 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"கொக்குவில் தந்த
.......குல விளக்கே
இன்முகம் காட்டும்
.......இனிய குணமே
வெள்ளை மனமே
....... வள்ளல் உள்ளமே
பண்பை ஊட்டி
.........பிரிந்து சென்றீரே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

