ஆறுதல்

நன்றி நவிலல்

கமலாம்பிகை கனகசபை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கமலாம்பிகை கனகசபை

வயது 7811 ஏப்ரல், 1941 – 10 ஜூலை, 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

எங்களின் குல விருட்சம் சாய்ந்த போது துயர் துடைக்க நேரில் வந்தோர், தொலைபேசியில் ஆறுதல் கூறியோர், உடனிருந்து உதவிகள் செய்தோர், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரங்கள், மலர்மாலைகள் கொண்டு துன்பத்தை பகிர்ந்து கொண்டோர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தில் 11/APR/1941 ஆம் ஆண்டு கு.விசுவலிங்கம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளாக கமலாம்பிகை அவர்கள் கு.வி செல்வத்துரை,கு.வி தம்பித்துரை, மனோன்மணி, மனோரஞ்சிதம், கு.வி மகாலிங்கம் மற்றும் கு.வி அமிர்தலிங்கம்,கு.வி பஞ்சலிங்கதுரை போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் சிவசம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகன் ஆசிரியர் கனகசபை என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வித்தியா, சத்தியா, சாவித்திரி, கௌசல்யா, நந்தகோபன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பாக்கியநாதன், குமரகுரு, அருட்செல்வம், ஸ்ரீஇந்திரன், மது போன்றவர்களை பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைத்து Dr.பிரியந்தினி, சியாம்கி, லக்சுமி, பிருந்தா, கரித்திரா, திவ்யா, கார்த்திகா, அஞ்சலி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இன்பமாக வாழ்ந்த இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.அத்துடன் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கியதுடன்.குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார்,உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.07.2019 இல் 78 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

தாயே எங்கள் தங்கத் தாமரையே
சேய் மனங்களை சிறப்பாய் புரிந்து
அங்கம் தழுவி அணைத்து மகிழ்ந்து
பங்கம் நெருங்காமல் காத்து நின்று
சங்கடம் வரின் சாந்தமாய் போக்கி
எங்கே போனீர் எமைப் பிரிந்து

பிற அறிவித்தல்கள்

  1. 11 ஜூலை, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.