31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாம்பிகை கனகலிங்கம்
வயது 6213 டிசம்பர், 1947 – 23 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- மல்லாவி
- வாழ்ந்த இடம்
- தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமல்லாவி யோகபுரம் 3ம் யூனிற்றை நிரந்தர முகவரியாகவும் தெஹிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலாம்பிகை கனகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்புமகளும், வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற திரு.வேலுப்பிள்ளை கனகலிங்கம் அவர்களின் அன்புமனைவியும்,
ராஜகுலேந்திரன்(சுவிஸ்), பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), காலஞ்சென்ற புவனேஸ்வரன், வனிதா(சுவிஸ்), ராஜேஸ்வரன்(லண்டன்), ரவீந்திரன்(சுவிஸ்), சிவகெளரி(லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சுபாஜினி, வக்சலா, சிவநாதன், மாலதி, சபீதா ஆகியோரின் மாமியாரும்,
ஜசிக்கா, ஜனந் ஆகியோரின் பாட்டியும், கிருஷன், ரேஷ்மி ஆகியோரின் அம்மம்மாவும்,
துரைராஜா, சிவராஜா, காலஞ்சென்ற சிவசோதி, காலஞ்சென்ற மனோன்மணி, கனகாம்பிகை, தனலட்சுமி, பரமேஸ்வரி, சுந்தரலிங்கம், யோகலிங்கம், சக்திவடிவேல் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னார் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து தங்களது அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்த நல் உள்லங்களுக்கும். இலங்கையிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் எமது துக்கத்தில் பங்குகொண்டவர்களுக்கும், பேருதவி புரிந்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் உற்றார், உறவினர் நண்பர்கள் யாவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீண்ட பயணம் சென்றுவிட்ட எம் அன்னையே!
நித்தமும் தவிக்கின்றோம் - நின் பிரிவால்
நீங்காது உங்கள் நினைவலைகள் எமை விட்டு!
மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிட்ட எம் அன்னையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

