மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலநாயகி சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை- தெல்லிப்பழை யூனியன் கல்லூரி
வயது 837 நவம்பர், 1932 – 27 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- தெல்லிப்பழை, கிளிநொச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, வவுனியா, கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலநாயகி சுப்பிரமணியம் அவர்கள் 27-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அப்பையா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகராஜா(உப அதிபர் மகாஜனா கல்லூரி) அவர்களின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அசோகன்(கனடா), வெண்ணிலா(ஐக்கிய அமெரிக்கா), தாரகா(கனடா), மேனகா(நோர்வே), பானுகோபன்(கனடா), பரணீதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயலக்ஷ்மன், சற்குணபாலா, பியோன்(Biyon), எலிசபெத்(Elizabeth), சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷிகா, மத்தியமா, சகானா, தேனுகா, குனேலியா, மதுவந்தி, ராகவி, சாகித்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-10-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கிளிநொச்சி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 1/4,
கணேசபுரம்,
கிளிநொச்சி.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

