மரண அறிவித்தல்

கமலபூரணி சண்முகநாதன்
வயது 77
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலபூரணி சண்முகநாதன் அவர்கள் 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்வம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கந்தையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சதீஸ்குமார்(சதீஸ்), விஜயகுமார்(விஜய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இரட்ணம்(இந்தியா), கனகமணி(இலங்கை), பிறைசூடி(இலங்கை), தங்கராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வளர்மதி, நிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சதூசா, தனோஜன், டனோசன், சாயிஷ், பிரவீன், மீரா, தர்சிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமும் கல்வி அறிவு கூடியவர்கள் சூழ்ந்துள்ள அழகிய திருநெல்வேலியில் வீர செங்குந்தர் முதலியார் பரம்பரையில் 28/JUL/1942 இல் திரு.திருமதி சின்னத்துரை செல்வம் தம்பதிகளின் அன்பு கொண்ட மகளாய் கமலபூரணி(கமலம்) அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அறிவு நிறைந்த மகனான சண்முகநாதன் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சதீஷ்குமார், விஜயகுமார் எனும் அன்புப் பிள்ளைகள் மற்றும் சதூசா, தனோஜன், டனோசன், சாயிஷ், பிரவீன், மீரா, தர்சிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.09.2019 இல் 77 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
"கண்ணின் மணியே
..............கருனை ஒளியே
மண்ணில் வாழ்ந்த
..............மாசற்ற ஜீவனே
எண்ணம் சிறக்க
..............எளிமையாக வாழ்ந்த
வண்ண மயிலே
..............வாழைக் கனியே
நின்னை நினைத்து
.............நித்தம் அழுகிறோம்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

