மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கமலாதேவி கந்தசாமி
வயது 6720 டிசம்பர், 1951 – 25 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ், ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி கந்தசாமி அவர்கள் 25-07-2019 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பராசக்தி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுதாஸ்கரன்(ஜேர்மனி), சுதாஜினி(லண்டன்), ஜெயாநந்தினி(பிரான்ஸ்), கிருபாகரன்(ஜேர்மனி), விமலராஜினி(கனடா), தர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாமினி, தேவதாசன், குமாரதாஸ், கௌசலா, உதயகுமார், அஜந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ராசதுரை மற்றும் ராணிமலர், காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், இந்திரன், பாலசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபினாஷ், அகிளாஷ், சஜீவினி, திலக்ஷன், கிஷாளன், டிசானி, டெனுசா, விபிசா, திவிசா, ஜஸ்விகா, ஜாதவன், ஜானவிகா, சனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் ஏழாலையில் 20/DEC/1951 இல் திரு.திருமதி. ஐயாத்துரை பராசக்தி தம்பதிகளின் அருமை மகளாய் கமலாதேவி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு. கந்தசாமி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சுதாஸ்கரன், சுதாஜினி, ஜெயாநந்தினி, கிருபாகரன், விமலராஜினி, தர்சினி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து பாமினி, தேவதாசன், குமாரதாஸ், கௌசலா, உதயகுமார், அஜந்தன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அபினாஷ், அகிளாஷ், சஜீவினி, திலக்ஷன், கிஷாளன், டிசானி, டெனுசா, விபிசா, திவிசா, ஜஸ்விகா, ஜாதவன், ஜானவிகா, சனோஜன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் குணம் என அன்பாக அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.07.2019 இல் 67 வயதில் ஜேர்மனியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ஏழாலை மண்ணின்
எழில் வதனமே
பாழாகாமல் காத்த
பாச உறவே
வாழும் வரை
வசந்தமாய் விளங்கி
மீளா நித்திரையில்
ஆழ்ந்தீரே இப்போ
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

