ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு8 ஜூன், 1937
இறப்பு6 நவம்பர், 2019
கமலாதேவி இராசரத்தினம் அவர்களின் படம்

கமலாதேவி இராசரத்தினம்

வயது 82

பிறந்த இடம்
தொண்டைமானாறு
வாழ்ந்த இடம்
தொண்டைமானாறு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராசரத்தினம் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

அரசரத்தினம், தேவிமலர், காலஞ்சென்ற நேசரத்தினம், அருந்தவரத்தினம், காலஞ்சென்ற ஞானரத்தினம், இராசமலர், இன்பமலர், நவமலர், ரேணுமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் மிக அழகு நிறைந்த இடமான வடமராட்சி வடக்கில் வடக்கே பெருங்கடலும் தெற்கே தொண்டமனாறு கடல்நீரேரியும் சூழ்ந்து குளிர்ச்சி தருவதுடன், பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் அருள் பாலிக்கும் இடமான தொண்டமனாற்றில் 08/JUN/1937 ஆம் ஆண்டில் திரு.திருமதி சுப்பிரமணியம் சின்னமணி தம்பதிகளின் அழகுக் குழந்தையாக கமலாதேவி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்து வளர்ந்து பெரியவளாகியதும், இராசரத்தினம் எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவரின் வாழ்க்கைப் பயனத்தில் வம்ச விருத்தியாக அரசரத்தினம், தேவிமலர், நேசரத்தினம், அருந்தவரத்தினம், ஞானரத்தினம், இராசமலர், இன்பமலர், நவமலர், ரேணுமலர் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 06.11.2019 இல் 82 வயதில் தொண்டமனாற்றில் மரணம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.