நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகமணி துரைச்சாமி
வயது 8528 ஜூன், 1934 – 22 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நந்தாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தில் 28/JUN/1934 இல் திரு.திருமதி நாகலிங்கம் வள்ளியம்மை தம்பதிகளுக்கு அன்பு மகளாக கனகமணி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கோபாலபிள்ளை, செல்லம்மா, சின்னத்துரை, முருகேசு, சின்னம்மா, முத்துக்குமாரு, செல்லையா போன்ற சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி வேலுப்பிள்ளை பெரியதங்கச்சி தம்பதிகளின் அழகு மகன் துரைச்சாமி எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.
இவர்களின் வாழ்க்கைப் பயனாக மனோன்மணி, சிவகுமார், சகுந்தலாதேவி, சிவராசா, சிவபாலன், சிவலிங்கம் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து தர்மபாலன், மகேந்திரன், யோகேஸ்வரி, திருவருள்செல்வி, இராஜேஸ்வரி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து, கல்பனா-சிவகுமார், மதுமதி-ரவிசங்கர், ஜெயபிரதாப்-தாரிணி, மயூரன், மயூரி, தமிழினி, சாகித்தியன், சாகித்தியா, சாதுரியா, வாகீசன், சுதேசன், கௌசிகன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், சாதனா, தனுசாந், நவினேஸ், நிதீன், அஷ்விதா போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அனைவருக்கும் உதவி செய்வதிலும், ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 22.10.2019 இல் 85 வயதில் கொக்குவிலில் உள்ள நந்தாவிலில் மரணம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

