ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு5 மே, 1944
இறப்பு14 மே, 2021
கனகமணி வைரவநாதன் அவர்களின் படம்

கனகமணி வைரவநாதன்

வயது 77

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் மாவுதிடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரவநாதன் கனகமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தம் கொடுத்தாய்
ஆற்றலுடன் எனை வளர்த்தாய்
ஆயிரம் உறவுகளுக்கு ஆலமரமாய்

இறைவன் எமக்கு கொடுத்த
முதல் முகவரி நீ அம்மா!
பத்து மாதம் கருவறையில் சுமந்த உன்னை,
பகலிரவாய் நான் சுமக்க நினைக்கின்றேன்
என்னோடு நீ இல்லை உங்கள் நினைவுகளை மட்டும்
நெஞ்சில் சுமக்க வைத்து எமை விட்டு எங்கு சென்றீர் !

கண் மூடி பார்த்தாலும் கண்களை திறந்தாலும்
கனவிலும் என் அன்னையே!
வேலையால் வரும் வரை
கால் கடுக்க நின்று கதவை திறந்து
பார்த்த முகம் காணோம்!

இனிப் போதும் என்று நினைத்தோ
கல்லறையில் உறங்கச் சென்றீர் !
வருடம் ஒன்று கடந்தாலும்
உன் நினைவுகளை கடக்க இயலாமல்
நீ விட்டுசென்ற இடத்தில் நாங்கள்..

நீ இல்லை என்ற பின்னும்ஏனோ
எங்கள் மனம் இரவும் பகலும் அலைகிறது
பிரிந்து போன நினைவுகள்
ஒவ்வொரு நாளும் கண்ணுக்குள்
வந்து கொண்டு தான் இருக்கும்

உங்கள் வீட்டின் மேல் உன்
திருமுகம் கண்டேனம்மா
உன் ஆசை வீடு மிளிர்கிறது
உங்கள் நினைவுகள் வதைக்குதம்மா
ஆண்டு ஒன்று அல்ல நீ கொடுத்த
உயிர் உள்ளவரை
உன் நினைவுகளுடன் நாங்கள்....

உன் ஆத்மா சாந்திஅடைய
இறைவனை வேண்டுகிறேன்
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.