50ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகம்மா கணபதிப்பிள்ளை
வயது 3425 மார்ச், 1932 – 24 நவம்பர், 1966
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா கணபதிப்பிள்ளை அவர்களின் 50ம் ஆண்டு நினைவஞ்சலி.
தொல்குடியில் வந்துதித்த கனகம்மா
துளசிசெடியாய் மணங்கமழும் எங்களம்மா
அல்லும்பகலும் உன்மடியைத் தொட்டிலாக்கி
ஆராரோபாட்டிசைத்து தூங்கவைத்தாய்
செல்லும் பாதைதனை வடிவமைத்து
சீராட்டி பாராட்டி பாலூட்டினாய்
வெல்லும் பாதைதனில் தடம்பதித்தோம்
விழிதிறந்து பெருமையுற தாயொருத்தியில்லை
அன்னையுன்னை நாம்பிரிந்து வருடங்கள்
ஐம்பது உருண்டோடிச் சென்றுவிட்டாலும்
உன்னைநாம் மறந்திடுவோமா உன்நிழலில்
வாழ்ந்திருந்த உடன்பிறந்தார் மறந்திடுவாரோ?
பொன்னின் உளங்கொண்ட பூமகளேயுன்
பொன்னான வாழ்வுதனைப் பாதியாக்கி
தன்னோடு சேர்த்துவிட்ட இறைவனவன்
தனிமரமாய் தந்தையையும் தவிக்கவைத்தான்
ஆண்டவனின் திருவடிகள்நாடி அன்றொருநாள்
ஐவரையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாய்
மாண்டவர்கள் மீண்டுமிங்கே மீள்வதுமில்லை
மறுபிறப்பு உண்டென்ற தத்துவமொன்றுண்டு
மீண்டுமொரு பிறப்பொன்றை இறையளித்தால்
மேதினியில் தாயாகவே பிறந்திடுவாயெனில்
ஈன்றவளின் திருமுகத்தை ரசித்தபடியே
எம்வாழ்வை இனிமையுடன் நகரவிடுவோம்.
உங்கள் பிரிவால் கணவர், பிள்ளைகள்
ஐ.நா கணபதிப்பிள்ளை(ரஞ்சனா கபே உரிமையாளர், சாவகச்சேரி),
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

