ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகம்மா கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகம்மா கந்தசாமி

வயது 8515 ஜூன், 1934 – 24 ஜூலை, 2019

பிறந்த இடம்
மீசாலை மேற்கு
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி வடக்கு, Bagnolet

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி வடக்கு டச்சுவீதி சுமைதாங்கியடியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Bagnolet ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா கந்தசாமி அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி அரசம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும், வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

தவராசா(தவம்- இலங்கை), கனகராசா(ராசா- கனடா), கனகராணி(ராணி- இலங்கை), தவராணி(தேவி- இலங்கை), துவாரகாதேவி(றஞ்சி- பிரான்ஸ்), சிவதர்சினி(தர்சி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பொன்னம்பலம், நாகலட்சுமி(கனடா), மகேஸ்வரன்(இலங்கை), ராஜ்குமார்(பிரான்ஸ்), சுபாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திருமகள், பிரகலாதன், கலைமகள், ஜெயசுதன், சிவசுதன், சுதாஜினி, ஆதவன், மாதவன், சிந்துஜா, சினேகா, சஞ்ஜெய், சஜீக்கா, சனன், சஜீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட மீசாலை மேற்கில் 15/JUN/1934 இல் சின்னதம்பி அரசம்மா தம்பதிகளின் அருமை மகளாய் கனகம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகன் திரு.கந்தசாமி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தவராசா, கனகராசா, கனகராணி, தவராணி, துவாரகாதேவி, சிவதர்சினி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து மகேஸ்வரி, பொன்னம்பலம், நாகலட்சுமி, மகேஸ்வரன், ராஜ்குமார், சுபாஸ் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து திருமகள், பிரகலாதன், கலைமகள், ஜெயசுதன், சிவசுதன், சதாஜினி, ஆதவன், மாதவன், சிந்துஜா, சினேகா, சஞ்ஜெய், சஜீக்கா, சனன், சஜீன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 24.07.2019 இல் 85 வயதில் பிரான்ஸில் உள்ள Bagnolet நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

சிறு விழிப் பார்வை நல்ல
சிந்தனை மனம்
ஏறு நெற்றி கொண்ட
ஏழ்மை உயிரே
வீறு நடை போட்டு வாழ்ந்து
விடியலை அடைந்து
பாருமையா வெள்ளை மனதை
பாரினைப் பிரிந்ததே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.