மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரெட்ணம் அரசரெட்ணம்
முன்னால் கணக்காய்வாளர், பிறவுன் கொம்பனி
வயது 7414 செப்டம்பர், 1944 – 4 மே, 2019
- பிறந்த இடம்
- Badulla
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரெட்ணம் அரசரெட்ணம் அவர்கள் 04-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரெட்ணம் அன்னபூரணி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
யதீஸ்வரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிவ சாந்தி அவர்களின் பாசமிகு மாமாவும்,
யதுஸ், சன்சியா ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, நாகரெட்ணம், சீவரெட்ணம், ராஜரெட்ணம், சிவராஜசிங்கம், தர்மரெட்ணம்(லண்டன்), சுசிகலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காசியம்மா, சாந்தி, ஜெயரெட்ண தேவி, யோகரஞ்சிதம், ராஜ்குமார், காலஞ்சென்ற இலங்கராஜா, கனகரத்தினம்மா, நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த மலைநாட்டில்,தோயிலை பெருந்தோட்டங்களும், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த ஊவா மாகாணத்தின் பதுளையில் உள்ள அப்புத்தளையில் 15/SEP/1944 இல் கனகரெட்ணம் அன்னபூரணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக அரசரெட்ணம் அவர்கள் செல்வராசா, நாகரெட்ணம், சீவரெட்ணம், ராஜரெட்ணம், சிவராஜசிங்கம், தர்மரெட்ணம், சுசிகலா போன்ற உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன், செல்லத்துரை ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகள் நாகரெத்தினம் அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து யதீஸ்வரன் ஆகிய பிள்ளையை பெற்று வளர்த்ததுடன், சிவசாந்தி என்பவரை திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் யதுஸ், சன்சியா போன்ற பேரப்பிள்ளைகளோடு மகிழ்வுற்று வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் பிறவுன் கொம்பனி கணக்காய்வாளராக செயற்பட்டு ஓய்வு நிலையும் அடைந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளை,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.05.2019 இல் 74 வயதில் பிரான்ஸில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
""பதுளையில் உதிர்த்த
.... பண்பான உறவே
அன்புகள் தந்து
......அனைவரையும் வாழ்த்தி
மங்கா மனதுடன்
....மகிழ்வாக வாழ்ந்து
பிரிந்து சென்று
....வேதனை தந்தீர்""
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

