மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கனகரட்ணம் கனகச்சந்திரன்
வணிக சிறப்பு பட்டதாரி- யாழ் பல்கலைக்கழகம்
வயது 4218 ஜூன், 1976 – 3 மே, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, அடம்பன், சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, மன்னார் அடம்பன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கனகச்சந்திரன் அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகம், கற்பகவதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
கனகரட்ணம் இராஜேஸ்வரி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும்,
கண்ணன்(ஜேர்மனி), கீதா(லண்டன்), தீபா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுசிதரன்(லண்டன்), சந்திரசோபா(ஜேர்மனி), செந்தில்நாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனீர்த்தி, அர்த்தீஸ், அகர்விஷ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ஆருத்திரா, அகரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சந்திரா, அருந்ததி, செல்வதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,
சிவா, தயா, சுதா, றஜி ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிஷாந்தன், மேகனாத், தனுஷிகா, துஷ்யந்தி, யுதர்ஷன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
மாதங்கி, மயூதா, மயூதன், தயலக்ஷன், சஷ்மிதா, சாரு, சிந்து, சரண், பிரியந், விது, தர்ஷனா, யுதர்ஷனா, விதுஷனா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் வீட்டுச் செல்வமே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
அம்மாவின் உயிர்மூச்சே நீ தானே
ஏன் மறந்து சென்றாய் எம் அம்மாவை
அண்ணனுக்கு அன்புத் தம்பியாய் நீ வளர்ந்தாயே
உயிரான உன் அன்புத் தங்கைகளை ஏன் அண்ணா
நீ விட்டுச்சென்றாய்
எங்கள் குடும்பத்தின் அறிவுக் களஞ்சியமே
அழகான உன் உருவம் கண்முன்னே நிக்குதண்ணா!
விதி செய்த செயலால் வெளிநாடு நாம் வந்து
எம்மை தவிக்க விட்டுச் சென்றாயே!
உன்னை நினைக்கையில்
உள்ளம் எல்லாம் நோகுதண்ணா!
என்ன பிழை செய்தோம் நாம் எல்லாம்
ஏன் அண்ணா எம்மை விட்டுச் சென்று விட்டாய்
மாமா சித்தா என்று உனை அழைக்கும்
உன் உயிர்களை ஏன் விட்டுச் சென்றாய்
அண்ணா நம் அம்மாவை ஒருகணம் நினைத்தாயா?!
இலங்கையில் துடிக்கின்றார்கள் உன் உறவுகள்
கனடாவில் கலங்குகிறார்கள் உன் உயிரான உள்ளங்கள்
எங்கள் தங்கமே மனசு துடிக்குதண்ணா
எம்மை விட்டு நீ செல்லவில்லை
எம்முள்ளே நீ அண்ணா உன் உள்ளே நாங்கள் அண்ணா!!!
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,நெல்வயல்கள், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தில்18/JUN/1976 இல் கனகரட்ணம் இராஜேஸ்வரி(கிளி) தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக கனகச்சந்திரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் குமணன், குமணி என சிறப்பு பெயர்களுடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கண்ணண், கீதா, தீபா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்ததுடன், கந்தையா நாகம்மா/சண்முகம் கற்பகவதி போன்றவர்களின் மடியிலும் அணைப்பிலும் மகிழ்ச்சியாக வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன், வவுனியா,மன்னார் அடம்பன் போன்ற இடங்களில் வாழ்ந்து நல்ல நண்பர்கள் கூட்டத்தை தனதாக்கி மகிழ்ந்தவர்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் நன்கு படித்து யாழ்/பல்கலைக்கழகத்தில் வணிக சிறப்புப் பட்டதாரியானதுடன், நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார், இவ்வாறு சகோதரங்கள்,நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 03.05.2019 இல் 42 வயதில் சுவிஸில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
""கல்வியில் சிறந்த
....எங்கள் உறவே
களைப்பை மறந்து
......உழைத்த வீரனே
இளமை வயதில்
....இழந்தோம் உமை
இரக்கம் அற்று
....இறைவன் பறித்தானே""
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

