ஆறுதல்

மரண அறிவித்தல்

கனகசிங்கம் மகேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசிங்கம் மகேந்திரன்

ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர் பருத்தித்துறை, வதிரி கனகசிங்க பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாவும், வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்பாள் ஆலய போஷகர்

வயது 9130 செப்டம்பர், 1929 – 13 மார்ச், 2021

பிறந்த இடம்
வதிரி
வாழ்ந்த இடம்
வல்வெட்டி, கொழும்பு, London, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டியை வசிப்பிடமாகவும், கொழும்பு, லண்டன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசிங்கம் மகேந்திரன் அவர்கள் 13-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகசிங்கம்(செல்லையா பள்ளிக்கூடம், வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி ஸ்தாபகர், கிராமக்கோட்டு நீதவானும்), பறுபதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்வெட்டியைச் சேர்ந்த பொன்னுத்துரை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினபூபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயந்தி(ரோசா), ஜெயக்குமார்(ஜெயம்), ஜெயானந்தன், ஜெயந்திரன்(இந்திரன்- பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், பொன்னுத்துரை, ஆறுமுகம், பரமேஸ்வரன், தெய்வேந்திரன் மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, மீனாட்சி, கயிலாயநாதன், கதிரவேற்பிள்ளை, சோதிசுந்தரம், சிவபாக்கியம், இராசபூபதி மற்றும் மரகதம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நந்தமழவன்(அருள்), சரோஜா, ஜெயந்தினி, பாரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெயநந்தன்(நிசாந்தன்), தனுஷா, ஹரிஷன், கோபிஷன், நிரோஷன், வீணா, தரிணி, சர்மிகா, ரஸ்மிகா, ஜெஸ்மிகா, பிரேமிகா, வீணாஷிரி, சுதன், லிசானி ஆகியோரின் அன்புப் பேரனும்,

கயிலன், கவின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை முன்பதிவு செய்தவர்களுடன் மட்டும் நடைபெறும். நேரில் வர இயலாதவர்கள் அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகளை நேரலையாக காணலாம். அனைவருக்கும் அனுமதி தர இயலாத நிலையை எண்ணி வருந்துகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.