ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கனகசிங்கம் பிரபாகர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

கனகசிங்கம் பிரபாகர்

வயது 4514 ஜூன், 1973 – 24 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
Ruesselsheim

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rüsselsheim ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசிங்கம் பிரபாகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் உயிரானவனே எங்கே சென்றுவிட்டாய்
என்னை தவிக்க விட்டு
நடந்ததெல்லாம் கனவாக இருக்க கூடாதா
என மனம் துடிக்குதடா

பிரபு பிரபு என உங்கள்
நினைவு தானே எப்பொழுதும்..
எங்கே சென்று விட்டீர்கள் இப்போது!

உன்னை மீண்டும் சேர
மனம் துடிக்குதடா!

ஓராண்டு சென்றாலும்
உனை சேரும் நாளை எண்ணிவாழ்கிறேன்
பிரபுஎன்றும் உங்கள் நினைவுகளுடன்....

அப்பா எங்கே என்று ஒவ்வொரு
விடிப்பொழுதும் எமதுவிழிகள் தேடுகிறது
அப்பா உங்களை!!!
எங்கே சென்றுவிட்டீர்கள் அப்பா!
கதறியழுகின்றோம்....

எமது ஆருயிரான எங்கள் அப்பா
நீங்கள் எமை விட்டு
ஓராண்டு கடந்தாலும் என்றும்
எமை விட்டு நீங்காது உங்கள் நினைவுகள்

எங்கள் அன்பானவனே உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்

— மனைவி, பிள்ளைகள்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், படித்த மக்களை அதிகம் கொண்டதும் நெல்வயல்கள், வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தரு மரங்கள் என அழகு நிறைந்த அரியாலையில் 14-06-1973 இல் கனகசிங்கம் கேசவராணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் பிரபாகர் அவர்கள் பிரேமளா, சுதாகர், நளாயினி ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த நாட்டில் அவதரித்தார்.

மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் யாழ்/திருநெல்வேலி தலங்காவற் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் பராசக்தி தம்பதிகளின் அழகுப் பெண்ணான சுஜீதா அவர்களைத் திருமணம் முடித்து வைத்தனர். இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்ததன் பயனாக ஹனுஜா, பவ்யா, லக்‌ஷியா போன்ற அழகுப் பிள்ளைகளை பெற்று அன்பாகவும் பண்பாகவும் வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் ஜேர்மனியிலுள்ளை தமிழ்க் கல்விக்கழகம் பிராங்பேர்ட் தழிழாலயம் போன்றவற்றுக்காக பாடுபட்டு உழைத்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 24.04.2019 இல் 45 வயதில் ஜேர்மனியில் உள்ள Ruesselsheim நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அரியாலை மண்ணின்
......அழகிய ஒளியே
அன்பு உள்ளமே
.......அழகிய கனியே
உங்கள் நினைவில்
.....உள்ளம் உருகி
உம் உருவம் தேடி
.......உறைந்த பனியானோம்"

பிற அறிவித்தல்கள்

  1. 26 ஏப்ரல், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.